Thursday, 23 July 2009

கடைசி நாள்.(வீடியோ)



இன்று உலகம் அழியப் போகிறது என்றால், அந்த நாள் ஒரு மனிதனுக்கு எப்படி இருந்தது என்பதைப் பற்றிய ஒரு கற்பனை. அதுவும் உலகம் ஐந்து விதமாக அழிந்தால் எப்படி? இதை வெறும் கற்பனை என்று தள்ளிவிடலாமா அல்லது இப்படி நடக்க சாத்தியம் உள்ளது என்று கூறுகிறீர்களா? தற்போது இங்கே இங்கிலாந்தில், ஸ்வைன் காய்ச்சல் அபாயம் பரவலாக உள்ளது. அதற்க்கு இந்நாட்டின் மருத்துவத் துறை என்ன கூறிஉள்ளார்கள் தெரியுமா? இந்த காய்ச்சலால் 65,000 சாவுகளை எதிர்பார்கிரார்களாம்! மேலும் இந்த காய்ச்சால் வந்துள்ளதாகத் தெரிந்தால் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம். போன் மூலமாகத் டாக்டருக்குத் தெரிவித்தால் போதும்! இதேப் போல ஒருக் காட்சி இந்த வீடியோவில் வருகிறது பாருங்கள்.










ஒரு நண்பர் 'என்ன எல்லாம் ஆங்கிலத்திலேயே உள்ளது?' என்று வினவி இருந்தார். என்ன செய்வது நண்பரே, இது போன்ற காணொளிகள் நம்ம ஆளுங்க பண்ண இன்னும் இருபது வருடங்களாவது ஆகும். இது BBC இன் தயாரிப்பு. இதுப் போல தமிழில் ஏதாவது இருந்தால் சொலுங்களேன். இதை நான் ஒரு கேவலமாக குறை கூறவில்லை. அவர்களுக்கு எல்லா வசதி வாய்ப்பும் உள்ளது என்றுத்தான் கூற வந்தேன். நீங்களே பாருங்கள், சில காலங்களுக்கு முன், இதே BBC, ஒரு அருமையான விவரணப் படத்தை அவர்கள் சேனலில் போட்டனர். ஒரு கணவன் மனைவியை தேர்ந்தெடுத்து, அந்தப் பெண்மணி கருவுறும் நாள் முதல், குழந்தைப் பிறக்கும் நாள்வரை, கூடவே இருந்து தத்ரூபமாக படம் பிடித்து இருந்தனர். இதில் வெளியே மட்டுமல்லாது உள்ளே குழந்தை எப்படி வளர்கிறது என்பதயும் காட்டி இருந்தனர். உண்மையிலே மெய்சிலிர்த்துப் போனேன். அவ்வளவு அருமையான அறிவியல் & மருத்துவப் படைப்பு. இதுப் போல நம் நாட்டில் எப்போது நடக்கும்? அதையும் பதிவாகப் போட நினைத்திருந்தேன். ஆனால் எந்த அளவிற்கு சாதியப் படும் என்று தெரியவில்லை. Nudity, அது, இது என்று புகார் வருமோ என்று நினைத்து கைவிட்டுவிட்டேன். சரி நண்பர்களே. வீடியோவைப் பாருங்கள். முடிந்தால் ஏதாவது கருத்து கூறுங்கள். வருகைக்கு நன்றி.





































Wednesday, 15 July 2009

நிஜ டெர்மினெட்டர்கள்.(வீடியோ)



Terminator திரைப்படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் அர்நால்ட் இயந்திர மனிதனாக வூக்க அட்டகாசங்களைப் பார்த்திருக்கிறோம். அதுப் போல் நிஜ வாழ்கையில் சாத்தியமா? ஆம் என்கிறார்கள் விஞ்ஞானிகள்! இது வரையில் வீட்டு வேலை செய்ய, தொழிச்சாலைகளில் சிக்கலான வேலைகளைச் செய்ய ரோபோக்களை உருவாக்கி உபயோகித்து வந்தனர். ஆனால் இப்போது போர்க்களங்களில் கொல்லும் இயந்திர மனிதர்களை உருவாக்கி உள்ளனர். இவைகள் நல்லதா கேட்டதா என்று போகப் போகத் தெரியும். ஏற்கனவே இராக் போரில் இவைகள் சொந்த வீரர்களையே சுட்டுத் தள்ளிஉள்ளன என்று கேள்வி. மேலும் ஒசாமா இது போன்ற எந்திரத்தால் ஏற்கெனவே கொல்லப்பட்டுவிட்டார் என்றும் கூறப்படுகிறது.


சரி இந்த, ஹிஸ்டரி சேனல் வழங்கிய 'Real Terminators' என்ற வீடியோவை பார்ப்போமா? மேற்கூறியவை எப்படிச் சாத்தியம் என்று விளக்கமாக கூறிஉள்ளனர்.




இப்பொது ஊக்க உரைகள் போடும் நேரம். நன்றி.