Thursday 22 October 2009

The Age of Stupid



The Age of Stupid, இந்த வாரத்தில் (21/22 Sep 2009) உலகம் முழுதும் 50 நாடுகளில், சுமார் 700 பதிப்புகளாக  வெளியிடப்பட்ட ஒரு அறிவியல் புனைக்கதைப் போன்று தோன்றும் இந்தப் படம்,  மனிதனுக்கு அறிவு புகட்டும் ஒரு பாடமாகும். மனித இனத்தையே அழிக்கவல்ல காலநிலை மாற்றத்தைக் குறித்த அபாய மணியாகும். இதைப் பார்த்த இங்கிலாந்து பாராளுமன்றமே, இதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த சூளுரைத்துள்ளனர் என்றால் ... இந்தப் படத்தின் தாக்கத்தை புரிந்துக் கொள்ளலாம்.
இந்தப் படத்தின் பெயர், The Age of Stupid, நாம் வாழும் தற்காலத்தை மனதில் கொண்டு, வருகால நம் சந்ததியினர் வருத்தத்துடனும், அதே சமயம் கோபத்துடனும் கூறும் வார்த்தைகளாக உள்ளது. இந்தப் படத்திற்கு இன்னொரு சிறப்பு என்னவென்றால், இது 'Pedal powered movie' என்றழைக்கப்படுகிறது. ஏனென்றால் இந்தப் படம் முற்றிலுமாக சுத்தமான - பசுமைக் கொள்கைகளை கொண்டு தயாரிக்கப்பட்டது. இப்படத்தின் பரிவியு காட்சி சூரிய சக்தியைக் கொண்டு காட்டப்பட்டது! இதற்க்கு வந்த சிறப்பு விருந்தினர்களும், நட்சத்திரங்களும் மிதிவண்டி மூலமாகத்தான் வந்தனர்! அங்கு விற்கப்பட்ட பாப்கார்ன் கூட அதற்கான இயந்திரத்தால் வறுக்கப்படவில்லை!(வீடியோ)

இதில் காட்டப்படும் 2055 ஆண்டு உலகத்தில், ஆல்ப்ஸ் மலைகளிலே பனிப்போர்வை இல்லை, லண்டன் நகரம் வெள்ளத்தில் மூழ்கிஇருக்க, ஆஸ்திரேலியா எரிந்துக்கொண்டும், சிங்கப்பூர்,ஹாங்காங் நகரங்கள் கடலில் அமிழிந்து, லாஸ் வேகாஸ் நகரெம் பாலைவனமாகி, இந்தியாவில் தாஜ் மஹால் சிதிலமடைந்து எலும்புக்கூடுகள் எங்கும் சிதறிக்கிடக்கின்றன. இதற்கான காரணங்களை பார்கும்போதுத்தான் நாம் வாழும் தற்காலம் முட்டாள்களின் காலம் என்றழைக்கப்படுகிறது.

இந்த படத்தில் முக்கிய கதாப்பாத்திரமான உலக வரலாற்றை கூறுபவராக நடித்திருப்பவர் Pete Postlethwaite. இவர் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட புகழ்ப்பெற்ற நடிகர். Lost World: Jurassic Park இல் வேட்டைக்காரரக வருபவரை நினைவிருக்கிறதா? அவர் 2009 ஆண்டு வாக்கில் மனித இனம் தொலைத்த பல நல்ல சந்தர்ப்பங்களை மீண்டும் நினைதுப்பார்ப்பதே இந்தப் படம். இப்படத்தின் இயக்குனர் Franny Amstrong   (அவரின் பேட்டி)இதுப்போன்ற படங்களை எடுத்துப் புகழ்பெற்றவர்.

சரி. ஒருவேளை இந்தியாவில் (படம்) இதைப் பார்க்க முடியாதவர்களுக்காக You Tube இல் உள்ள வீடியோக்களை இங்கே கொடுத்துள்ளேன். பார்த்து உங்களின் கருத்துகளைக் கூறவும்.நன்றி.















Friday 9 October 2009

அழிவுக்கு மறுப்பெயர் அபோபிஸ் (வீடியோ)





ப்ருஸ் வில்லிஸ் நடித்த அர்மகேடோன் படத்தில் பூமியைத் தாக்கும் ஆஸ்டிராயிடு (Asteroid) எனப்படும் சிறு கோள்கள் ஏற்படுத்தும் பீதி நிஜமானால் எப்படி இருக்கும்? [ படம் பார்க்காதவர்கள் இங்கே செல்லவும் ]

ஆமாம் நண்பர்களே, அந்த சிறுக் கோளின் பெயர் ' அபோபிஸ் ' (Apophis). இது 2004 இல் முதல் முதலாக பூமியை நோக்கி விரைவது கண்டுப்பிடிகப்பட்டது. அமெரிக்க கால்பந்து மைதானத்தைப் போல இரண்டரை மடங்கு பெரியது! இது 2029 ஆம் வருடம்,ஏப்ரல் மாதம், 13 அம தேதி ( a Friday the 13th!) பூமிக்கு மிக அருகே, அதாவது 29,450 கிமி ( 18,300 மைல்) தூரத்தில் கடந்துச் செல்லும். இந்தத் தூரம் சில செயற்கைக் கோள்களைவிட குறைந்த தூரம்! இதுவரை மனிதன் அறிந்தவரையில், பூமிக்கு அருகே வரும் மிகப் பெரிய பொருள் இதுதான்!

ஆனால் பிரச்சினை அப்போது பெரியதாக இல்லை. 2036 ஆம் ஆண்டு, இந்த மிகப் பெரிய பாறை பூமியை தாக்கும் சாத்தியக் கூறு 2,50,000 பகுதிகளில் ஒன்றாகும்! இது தற்போதுள்ள கூற்று. ஆனால் 2029 இல் பூமிக்கு அருகில் வரும்போது, பூமியின் ஈர்ப்பு விசையால் அதன் பாதையில் ஏற்ப்படும் மாற்றம், 2036 ஆம் வருடம் பெரும் சிக்கலை ஏற்படுத்துமா என்பதுதான் தற்போதைய கவலை.

சரி இந்த 'அபோபிஸ்' வந்து மோதினால் என்ன? இதற்க்கு உலகப்புகழ் விஞ்ஞானி Dr.டைசன் என்னக் கூறுகிறார் என்றுப் பாப்போம்.


 இந்த அக்டோபர் எட்டாந்தேதி, புர்டோ ரிகோவில் அமெரிக்க விண்வெளித்துறை மாநாட்டில் இதுப் பற்றி நாசாவின் விஞ்ஞானிகள் நிறைய முக்கியமான முடிவுகளை எடுத்திருப்பார்கள். என்னவென்று தெரியவில்லை. அதுவரையில் நாம் கீழ் உள்ள காணொளியை காண்போம். நிறைய விஷயங்களை அறிந்துக் கொள்வோம்.












Friday 2 October 2009

அடுத்த சுனாமி அமெரிக்காவிலா? (வீடியோ)



செப்டம்பர் 29, அமெரிக்க சமோவா தீவு, 8.3 ரிக்டர் அளவு நிலநடுக்கம். தொடர்ந்து சுனாமி! பின்பு 30 அன்று 10.16 மணிக்கு இந்தோனேசியா சுமத்ரா தீவுகளில் 7.6 ரிக்டர் அளவில் நிலஅதிச்சி! பிறகு அன்றே 1.52 மணிக்கு 6.6 அளவில் ஏற்ப்பட்டது. இன்று காந்தி ஜெயந்தி அன்று, பசிபிக் பெருங்கடலில் ஆஸ்திரேலியா , நியூ ஸீலாந்து அருகில் டோங்கா தீவுகளில் 6.1 அளவில் மீண்டும்.

இந்தச் செய்திகளை அலசிக்கொண்டிருந்தப்போது கீழுள்ள வீடியோ கண்ணில் பட்டது. சுனாமி என்ற அழிவுச் சக்தியை அக்கு வேறு ஆணிவேராக பிரித்துப் போட்டிருக்கிறார்கள். 2004 இல் வந்த ஆசியச் சுனாமியின் பிறப்பிடத்திற்கு சென்று கடலுக்கடியில் அது எப்படி ஏற்பட்டது என்று ஆராய்ச்சி செய்துள்ளனர். அப்படியே போகிறப்போக்கில் அமெரிக்காவின் வடமேற்கு கடற்க்கரை பகுதிகள் எதிர்நோக்கியுள்ள அதிபயங்கர அபாயத்தையும் போட்டு உடைத்துச் செல்கின்றனர். ஒன்றும் சொல்லுகிற மாதிரி இல்லை. நீங்களே வந்துப் பாருங்கள். எல்லாம் இயற்கை விட்ட வழி! ......எல்லோரயும்  விஞ்ஞானமும்  அதன் மூலம் மனிதன் பெறும் அறிவின் செயல்பாடுத்தான் காப்பாற்றவேண்டும்!