Showing posts with label tamil. Show all posts
Showing posts with label tamil. Show all posts

Thursday, 27 May 2010

நடுங்கவைத்த நடுவான விபரீதம் !



சில நாட்களுக்கு முன்  மங்களூரில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குளாகி தீப்பிடித்து ஏறக்குறைய 160 உயிர்கள் இழக்கப்பட்டுள்ளன. மனதை மிகவும் வருந்தச் செய்யும் நிகழ்ச்சியாகும். விபத்தில் தங்களுக்கு அருமையானவர்களை இழந்த எல்லோருக்கும் நம்முடைய ஆழ்ந்த அனுதாபங்கள்  உரித்தாகுக. இவ்வளவு உயிர்களை பலிக்கொண்டு, மங்களூர் விமான நிலைய ஓடுத்தளம் மிகவும் ஆபத்தானது என்று தெரிந்துக் கொள்ள நேர்ந்தது மிகவும் துரதிஷ்டம்.இனியாவது வேறொரு நல்ல பாதுகாப்பான இடத்தில் விமான நிலையத்தை அமைத்து, எதிர்காலத்தில் இத்தகைய அவலங்களை தவிர்க்கவேண்டும்.

சென்ற ஒரு மாதமாக உலக, குறிப்பாக அமெரிக்க மற்றும் ஐரோப்பிய விமான போக்குவரத்தை செயலிழக்கச் செய்தது ஒரு எரிமலை வெடிப்பு ! எரிமலை  வெடித்தால் என்ன?, கொஞ்ச தூரமாகப் சுற்றிக்கொண்டு பறந்தால் போயிற்று? ஆனால்  இங்குத்தான் சவாலே இருக்கிறது . பிரச்சனை எரிமலையினால் அல்ல. அது வெளியேற்றிய சாம்பலால்தான் பேரும் சோதனை.

இந்தக் காலத்து விமானங்கள் மேகம், இடி, மின்னல் போன்ற எல்லாவற்றையும் சமாளித்து பரந்து வருகின்றன. ஆனால் இந்த எரிமலைச் சாம்பல் என்றவுடன் நடுங்கி தரையிறக்கப்பட்டன! அப்படி என்ன மோசம் இந்த சாம்பல் ? சென்ற மார்ச்  மாதம் 20 ஆம் தேதி ஆரம்பித்தது இந்த களேபரம். ஆம், ஐஸ்லாந்து நாட்டின் தென் கோடியில் உள்ள ' 
Eyjafjallajökull ' என்றப் பெயருடைய எரிமலை முதலாவதாக சீறத் துவங்கியது. (அதற்கும் முன்னாடி 920, 1612, மற்றும் 1821 லிருந்து 1823 வரை) 
[அந்த எரிமலையின் பெயரை தமிழில் எழுத்தும் விளையாட்டுக்கு நான் வரவில்லை. நிறைப்பேர் அந்தப் பெயரை உச்சரிக்க  முயற்சித்திருக்கிறார்கள். அதைப்  பார்க்க இங்கே செல்லவும் .] 


தரையில் ஒரு எரிமலை வெடித்து சிதறி, சாம்பலையும் நெருப்பையும் கக்கும்போது, அதன் சாம்பல்பல ஆயிரம் அடிகளுக்கும் மேல் பரவி இருக்கும். இதைப்பற்றி தெரியாமல் எதாவது விமானம் அதனூடே செல்ல நேரிட்டால், அதன் கதி என்னவாகும்? இதை நான் வார்த்தைகளால் விளக்குவதைவிட கீழ் வரும் வீடியோக்களில் அருமையாக விளக்கப்பட்டுள்ளன.


பிபிசி இன் இணையதளம் கொடுக்கும் விளக்கம் இங்கே 


இதோ அந்த காணொளிகள்......





ஆமாம்... இதற்கு முன்னரே இதுபோன்ற பேராபத்து நிகழ்ந்துள்ளதா? எங்கே?... எப்போது?....
ஆம்! 1982 ஆம் வருடம், ஜூன் 24 ஆம் தேதி , லண்டன் மாநகரிலிருந்து, நியுசிலாந்தின் ஆக்லேன்ட் நகருக்கு சென்ற, பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம்,போகும் வழியில்  எரிமலைச் சாம்பல் எனும் பேராபத்தில் சிக்கியது. அதில் பயணித்த பயணிகள் 248 பேர். விமான ஊழியர்கள் 15 பேர். போயிங் 747 வகையைச் சேர்ந்த அந்த விமானம், லண்டனில் புறப்பட்டு பாம்பே(மும்பை), சென்னை,(நம்ம ஆளுங்க யாராவது ஏறினாங்களா?!), கோலாலாம்பூர், பெர்த், மெல்போர்ன் போன்ற இடங்களில் நின்று(நம்ம ஊர் பஸ் தேவல!) ஆக்லேன்ட் போய்ச் சேர்ந்திருக்கவேண்டும். ஆனால்... நடந்தது என்ன...? கோலாலாம்பூர் விட்டு இந்தோனேசியாவின் மேல் பறக்கும் போது கீழே வெடித்துச்  சிதறிய எரிமலையின் சாம்பலில் சிக்கியது....
ஆக்லேன்ட் நகர பொருட்காட்சியில்  உள்ள, அந்த விமான எஞ்சினின் பாதிக்கப்பட்ட பாகங்கள்.
அந்தப் பதினைந்துப்பேர்...
ஹாலிவுட்டில் விமான விபத்து சம்மந்தமான எத்தனையோ படங்கள் வந்துள்ளன, நாமும் பார்த்திருக்கிறோம் .... ஆனால் இங்கிலாந்தின் FIVE Channel நிறுவனம் தயாரித்து ஒளிப்பரப்பிய 'Volcanic Ash: Flight of Terror' என்ற விவரணப் படத்தை கண்டு விக்கித்துப் போனேன்.அவ்வளவு தத்ரூபம் & த்ரில்! ஒரு தொலைகாட்சி படத்திற்கே அவர்கள் எடுத்துக்கொள்ளும் சிரத்தையையும், கவனத்தையும் கண்டு, நம்ம ஊர் 'உலகத்தர மாபெரும் வெற்றிப்படங்களை' நினைத்து அழுவதா,சிரிப்பதா என்று தெரியவில்லை. 
சரி நண்பர்களே, இனி அந்தக் காணொளியை நீங்களும் கண்டு களியுங்கள். 
எச்சரிக்கை...... !
" எல்லோரும் தங்களின் சீட் பெல்டுகளை அணிந்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்"
  +-

Thursday, 22 October 2009

The Age of Stupid



The Age of Stupid, இந்த வாரத்தில் (21/22 Sep 2009) உலகம் முழுதும் 50 நாடுகளில், சுமார் 700 பதிப்புகளாக  வெளியிடப்பட்ட ஒரு அறிவியல் புனைக்கதைப் போன்று தோன்றும் இந்தப் படம்,  மனிதனுக்கு அறிவு புகட்டும் ஒரு பாடமாகும். மனித இனத்தையே அழிக்கவல்ல காலநிலை மாற்றத்தைக் குறித்த அபாய மணியாகும். இதைப் பார்த்த இங்கிலாந்து பாராளுமன்றமே, இதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த சூளுரைத்துள்ளனர் என்றால் ... இந்தப் படத்தின் தாக்கத்தை புரிந்துக் கொள்ளலாம்.
இந்தப் படத்தின் பெயர், The Age of Stupid, நாம் வாழும் தற்காலத்தை மனதில் கொண்டு, வருகால நம் சந்ததியினர் வருத்தத்துடனும், அதே சமயம் கோபத்துடனும் கூறும் வார்த்தைகளாக உள்ளது. இந்தப் படத்திற்கு இன்னொரு சிறப்பு என்னவென்றால், இது 'Pedal powered movie' என்றழைக்கப்படுகிறது. ஏனென்றால் இந்தப் படம் முற்றிலுமாக சுத்தமான - பசுமைக் கொள்கைகளை கொண்டு தயாரிக்கப்பட்டது. இப்படத்தின் பரிவியு காட்சி சூரிய சக்தியைக் கொண்டு காட்டப்பட்டது! இதற்க்கு வந்த சிறப்பு விருந்தினர்களும், நட்சத்திரங்களும் மிதிவண்டி மூலமாகத்தான் வந்தனர்! அங்கு விற்கப்பட்ட பாப்கார்ன் கூட அதற்கான இயந்திரத்தால் வறுக்கப்படவில்லை!(வீடியோ)

இதில் காட்டப்படும் 2055 ஆண்டு உலகத்தில், ஆல்ப்ஸ் மலைகளிலே பனிப்போர்வை இல்லை, லண்டன் நகரம் வெள்ளத்தில் மூழ்கிஇருக்க, ஆஸ்திரேலியா எரிந்துக்கொண்டும், சிங்கப்பூர்,ஹாங்காங் நகரங்கள் கடலில் அமிழிந்து, லாஸ் வேகாஸ் நகரெம் பாலைவனமாகி, இந்தியாவில் தாஜ் மஹால் சிதிலமடைந்து எலும்புக்கூடுகள் எங்கும் சிதறிக்கிடக்கின்றன. இதற்கான காரணங்களை பார்கும்போதுத்தான் நாம் வாழும் தற்காலம் முட்டாள்களின் காலம் என்றழைக்கப்படுகிறது.

இந்த படத்தில் முக்கிய கதாப்பாத்திரமான உலக வரலாற்றை கூறுபவராக நடித்திருப்பவர் Pete Postlethwaite. இவர் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட புகழ்ப்பெற்ற நடிகர். Lost World: Jurassic Park இல் வேட்டைக்காரரக வருபவரை நினைவிருக்கிறதா? அவர் 2009 ஆண்டு வாக்கில் மனித இனம் தொலைத்த பல நல்ல சந்தர்ப்பங்களை மீண்டும் நினைதுப்பார்ப்பதே இந்தப் படம். இப்படத்தின் இயக்குனர் Franny Amstrong   (அவரின் பேட்டி)இதுப்போன்ற படங்களை எடுத்துப் புகழ்பெற்றவர்.

சரி. ஒருவேளை இந்தியாவில் (படம்) இதைப் பார்க்க முடியாதவர்களுக்காக You Tube இல் உள்ள வீடியோக்களை இங்கே கொடுத்துள்ளேன். பார்த்து உங்களின் கருத்துகளைக் கூறவும்.நன்றி.















Friday, 9 October 2009

அழிவுக்கு மறுப்பெயர் அபோபிஸ் (வீடியோ)





ப்ருஸ் வில்லிஸ் நடித்த அர்மகேடோன் படத்தில் பூமியைத் தாக்கும் ஆஸ்டிராயிடு (Asteroid) எனப்படும் சிறு கோள்கள் ஏற்படுத்தும் பீதி நிஜமானால் எப்படி இருக்கும்? [ படம் பார்க்காதவர்கள் இங்கே செல்லவும் ]

ஆமாம் நண்பர்களே, அந்த சிறுக் கோளின் பெயர் ' அபோபிஸ் ' (Apophis). இது 2004 இல் முதல் முதலாக பூமியை நோக்கி விரைவது கண்டுப்பிடிகப்பட்டது. அமெரிக்க கால்பந்து மைதானத்தைப் போல இரண்டரை மடங்கு பெரியது! இது 2029 ஆம் வருடம்,ஏப்ரல் மாதம், 13 அம தேதி ( a Friday the 13th!) பூமிக்கு மிக அருகே, அதாவது 29,450 கிமி ( 18,300 மைல்) தூரத்தில் கடந்துச் செல்லும். இந்தத் தூரம் சில செயற்கைக் கோள்களைவிட குறைந்த தூரம்! இதுவரை மனிதன் அறிந்தவரையில், பூமிக்கு அருகே வரும் மிகப் பெரிய பொருள் இதுதான்!

ஆனால் பிரச்சினை அப்போது பெரியதாக இல்லை. 2036 ஆம் ஆண்டு, இந்த மிகப் பெரிய பாறை பூமியை தாக்கும் சாத்தியக் கூறு 2,50,000 பகுதிகளில் ஒன்றாகும்! இது தற்போதுள்ள கூற்று. ஆனால் 2029 இல் பூமிக்கு அருகில் வரும்போது, பூமியின் ஈர்ப்பு விசையால் அதன் பாதையில் ஏற்ப்படும் மாற்றம், 2036 ஆம் வருடம் பெரும் சிக்கலை ஏற்படுத்துமா என்பதுதான் தற்போதைய கவலை.

சரி இந்த 'அபோபிஸ்' வந்து மோதினால் என்ன? இதற்க்கு உலகப்புகழ் விஞ்ஞானி Dr.டைசன் என்னக் கூறுகிறார் என்றுப் பாப்போம்.


 இந்த அக்டோபர் எட்டாந்தேதி, புர்டோ ரிகோவில் அமெரிக்க விண்வெளித்துறை மாநாட்டில் இதுப் பற்றி நாசாவின் விஞ்ஞானிகள் நிறைய முக்கியமான முடிவுகளை எடுத்திருப்பார்கள். என்னவென்று தெரியவில்லை. அதுவரையில் நாம் கீழ் உள்ள காணொளியை காண்போம். நிறைய விஷயங்களை அறிந்துக் கொள்வோம்.












Friday, 2 October 2009

அடுத்த சுனாமி அமெரிக்காவிலா? (வீடியோ)



செப்டம்பர் 29, அமெரிக்க சமோவா தீவு, 8.3 ரிக்டர் அளவு நிலநடுக்கம். தொடர்ந்து சுனாமி! பின்பு 30 அன்று 10.16 மணிக்கு இந்தோனேசியா சுமத்ரா தீவுகளில் 7.6 ரிக்டர் அளவில் நிலஅதிச்சி! பிறகு அன்றே 1.52 மணிக்கு 6.6 அளவில் ஏற்ப்பட்டது. இன்று காந்தி ஜெயந்தி அன்று, பசிபிக் பெருங்கடலில் ஆஸ்திரேலியா , நியூ ஸீலாந்து அருகில் டோங்கா தீவுகளில் 6.1 அளவில் மீண்டும்.

இந்தச் செய்திகளை அலசிக்கொண்டிருந்தப்போது கீழுள்ள வீடியோ கண்ணில் பட்டது. சுனாமி என்ற அழிவுச் சக்தியை அக்கு வேறு ஆணிவேராக பிரித்துப் போட்டிருக்கிறார்கள். 2004 இல் வந்த ஆசியச் சுனாமியின் பிறப்பிடத்திற்கு சென்று கடலுக்கடியில் அது எப்படி ஏற்பட்டது என்று ஆராய்ச்சி செய்துள்ளனர். அப்படியே போகிறப்போக்கில் அமெரிக்காவின் வடமேற்கு கடற்க்கரை பகுதிகள் எதிர்நோக்கியுள்ள அதிபயங்கர அபாயத்தையும் போட்டு உடைத்துச் செல்கின்றனர். ஒன்றும் சொல்லுகிற மாதிரி இல்லை. நீங்களே வந்துப் பாருங்கள். எல்லாம் இயற்கை விட்ட வழி! ......எல்லோரயும்  விஞ்ஞானமும்  அதன் மூலம் மனிதன் பெறும் அறிவின் செயல்பாடுத்தான் காப்பாற்றவேண்டும்!

















Monday, 21 September 2009

பிபிசி பார்வையில் 'உலகம்'(வீடியோ)


'EARTH' என்று பெயரிடப்பட்ட இந்த காணொளி, உலகிலேயே அதிகம் செலவிடப்பட்டு தயாரிக்கப் பட்ட காணொளி என்றுக் கருதப்பட்ட டிஸ்கவரியின் Planet Earth வரிசையின் வாரிசு ஆகும். சுமார் 8 மில்லியன் பிரிட்டிஷ் பௌண்டுகள் வரை பணம் தேவைப்பட்டுள்ளது இந்தப் படங்களை முடிக்க. 130 ஒளிப்பதிவாளர்களும், தொழில்நுட்பவல்லுனர்களும் சேர்ந்து, 62 நாடுகளில் படமாகப்பட்டதாகும்.

இந்தப் படத்தில் மூன்று மிருக இனக் குடும்பத்தைத் நாம் தொடரப்போகிறோம். முதலில் ஒரு பனிக்கரடிக் குடும்பம், தட்பவெப்ப சூழ்நிலை மாற்றம் காரணமாக, ஆர்டிக் பனிப் பிரதேசங்களில் உணவுக்காக அலையும் அவலத்தை காணப் போகிறோம். பிறகு ஒரு ஆப்பிரிக்க யானைக் குடும்பம், கோள வெதும்பல் எனப்படும் 'global warming' காரணமாக மழை தவறுவதால் ஏற்படும் வறட்சியின் காரணமாக தன் குட்டியுடன் தண்ணிருக்காக என்னக் கஷ்டப்படுகுஇறது என்பதைப் பார்த்தால், நம் கண்கள் குளமாகும். கடைசியாக கடலில் ஏற்படும் மாற்றங்களால் திமிங்கலங்கள் படும் துயரையும் காணலாம். எங்கெங்கோ, உலகின் பல்வேறு மூலைகளில் நடக்கும் இந்தத் துயரங்களின் நடுவே, எல்லா உயிர்களுக்கும் உள்ள அந்தத் தாய்ப்பாசம்,எவ்வளவு கஷ்டத்தையும் எதிர்க்கொள்ளும் சக்தியை அந்த விலங்குகளுக்கு தருகிறது என்பதை கண்கூடாகக் காணலாம். மனிதர்களுக்கு நடுவேதான் மனதைத்தொடும், மனதை நெகிழவைக்கும் சூழ்நிலைகள் இருக்கும் என்று நினைப்பவர்கள், இந்தப் படத்தைப் பார்த்தால் தங்கள் என்னத்தை மாற்றிக் கொள்ளுவார்கள் என்பது நிச்சயம். கடைசியாக இவை எல்லாவற்றிற்கும் காரணம் யார் என்று கேட்கத் தோன்றுகிறது. யாருங்க காரணம்?

[ 72 நிமிடங்களுக்குப் பிறகு வீடியோ நின்றுவிடும். அப்போது உங்கள் ரூட்டர் / மோடெம்- மின் இணைப்பைத் துண்டித்துவிட்டு, ஒரு நிமிடம் கழித்து இணைத்து மீண்டும் விட்ட இடத்திலிருந்து தொடருங்கள்.]


Thursday, 3 September 2009

தண்ணீர்.... தண்ணீர் ! (வீடியோ)

தண்ணீரை..... பார்க்காத நாளில்லை! பருகாத பொழுதில்லை! அது இல்லாமல் உலகில்லை! நம் வாழ்வோடு பின்னிப் பிணைந்து, அத்தியாவசியப் பொருளாக உள்ள இந்த நீரைப்பற்றி நமக்கு எவ்வளவு விஷயங்கள் தெரியும்? நண்பர் சென்ஷியின் வலைப்பூவில் உள்ள மரியாதைக்குரிய அமரர் நாகேஷின் வானொலிப் பேட்டியில் அவர் , " நமக்கு எத்தனைப் பற்கள்? என்று யாரவது கேட்டால், உடனே '32' என்று உடனே பதில் கூறுகிறோம். என்றைக்காவது அந்த 32 பற்களையும் எண்ணிப் பார்த்திருக்கிறோமா? " என்றுக் கேட்டாரே, அதுதான் நினைவுக்கு வருகிறது! அதுப்போல 'தண்ணிக்குடி, தண்ணிப்புடி, தண்ணியடி' என்று தினந்தோறும் அதை உபயோகிக்காமல் இருந்ததில்லை. ஆகவே அதைப் பற்றி 'top to bottom ' தெரிந்துகொள்ளவேண்டும் என்று நினைத்ததுண்டா? (நான் சொல்லுவது எல்லோருக்கும் அல்ல) இதோ, அதற்கான நேரம் வந்துள்ளதாக நினைத்துக் கொள்ளுங்கள்.. 'Water:The Great Mystery' என்ற வீடியோவைப் பார்க்க நேர்ந்தது. அதில் கூறப்பட்ட விவரங்கள் என்னை மிகவும் கவர்ந்தது. அதை உங்களுடனும் பகிர்ந்துக்கொள்ளவே இந்தப் பதிவு. நீங்களும் பார்த்து பார்த்து, மற்றவர்களும் பார்த்து தெரிந்துக்கொள்ள வோட்டும் போடுங்கள்.

தண்ணீரைப் பற்றிய பதிவாதலால், என்ன எழுதலாம் என்று நினைதுக்கொண்டிருந்தப்போது, முன்னுரை கூற முன்வந்தது இந்த வீடியோ. நானாக எழுதுவதைக் காட்டிலும், இது நன்றாக போய்ச்சேரும்(!) என்பதால் அதையும் சேர்த்து விட்டேன். திருப்தியா? என்று மறக்காமல் கூறுங்கள். (இதுப் போல ஒரு டீச்சர் கிடைத்தால், நம்ம பசங்க ஒருத்தரும் கிளாஸ்க்கு கட்அடிக்கமாட்டார்கள், மற்றும் நூறு சதம் பாஸ்!)



முன்னுரை by ஸ்பெஷல் டீச்சர்!



இப்போது மெயின் படம்!

Tuesday, 25 August 2009

ஸ்வைன் ஃப்ளு: மருத்துவச் சொற்பொழிவு (வீடியோ)



'பன்றிக் காய்ச்சல்' எனப்படும் ' ஸ்வைன் ஃப்ளு' வைப் பற்றி நிறையப்பேர் பதிவுகள் போட்டுவிட்டனர். எல்லாம், எல்லோருக்கும் மிகவும் உபயோகமாக இருந்தது. அந்த வரிசையில் இன்னுமொருப் பதிவு. ஆனால் இந்த முறை அமெரிக்காவின், கலிபோர்னியாவின் புகழ்பெற்ற பெர்கேலே பல்கலைகழகத்தில் நடந்த ஸ்வைன் ஃப்ளு பற்றிய மருத்துவக் கருத்தரங்கின் வீடியோப் பதிவு!
இந்த காய்ச்சலைப் பற்றி அனேகமாக எல்லோருக்கும் தெரிந்து இருப்பதால் நேராக வீடியோவுக்குப் போய்விடலாம். இது எல்லோரயும் போய்ச்சேர மறக்காமல் வோட்டுப் போடவும். வருகைக்கு நன்றி.