Monday 21 September 2009

பிபிசி பார்வையில் 'உலகம்'(வீடியோ)


'EARTH' என்று பெயரிடப்பட்ட இந்த காணொளி, உலகிலேயே அதிகம் செலவிடப்பட்டு தயாரிக்கப் பட்ட காணொளி என்றுக் கருதப்பட்ட டிஸ்கவரியின் Planet Earth வரிசையின் வாரிசு ஆகும். சுமார் 8 மில்லியன் பிரிட்டிஷ் பௌண்டுகள் வரை பணம் தேவைப்பட்டுள்ளது இந்தப் படங்களை முடிக்க. 130 ஒளிப்பதிவாளர்களும், தொழில்நுட்பவல்லுனர்களும் சேர்ந்து, 62 நாடுகளில் படமாகப்பட்டதாகும்.

இந்தப் படத்தில் மூன்று மிருக இனக் குடும்பத்தைத் நாம் தொடரப்போகிறோம். முதலில் ஒரு பனிக்கரடிக் குடும்பம், தட்பவெப்ப சூழ்நிலை மாற்றம் காரணமாக, ஆர்டிக் பனிப் பிரதேசங்களில் உணவுக்காக அலையும் அவலத்தை காணப் போகிறோம். பிறகு ஒரு ஆப்பிரிக்க யானைக் குடும்பம், கோள வெதும்பல் எனப்படும் 'global warming' காரணமாக மழை தவறுவதால் ஏற்படும் வறட்சியின் காரணமாக தன் குட்டியுடன் தண்ணிருக்காக என்னக் கஷ்டப்படுகுஇறது என்பதைப் பார்த்தால், நம் கண்கள் குளமாகும். கடைசியாக கடலில் ஏற்படும் மாற்றங்களால் திமிங்கலங்கள் படும் துயரையும் காணலாம். எங்கெங்கோ, உலகின் பல்வேறு மூலைகளில் நடக்கும் இந்தத் துயரங்களின் நடுவே, எல்லா உயிர்களுக்கும் உள்ள அந்தத் தாய்ப்பாசம்,எவ்வளவு கஷ்டத்தையும் எதிர்க்கொள்ளும் சக்தியை அந்த விலங்குகளுக்கு தருகிறது என்பதை கண்கூடாகக் காணலாம். மனிதர்களுக்கு நடுவேதான் மனதைத்தொடும், மனதை நெகிழவைக்கும் சூழ்நிலைகள் இருக்கும் என்று நினைப்பவர்கள், இந்தப் படத்தைப் பார்த்தால் தங்கள் என்னத்தை மாற்றிக் கொள்ளுவார்கள் என்பது நிச்சயம். கடைசியாக இவை எல்லாவற்றிற்கும் காரணம் யார் என்று கேட்கத் தோன்றுகிறது. யாருங்க காரணம்?

[ 72 நிமிடங்களுக்குப் பிறகு வீடியோ நின்றுவிடும். அப்போது உங்கள் ரூட்டர் / மோடெம்- மின் இணைப்பைத் துண்டித்துவிட்டு, ஒரு நிமிடம் கழித்து இணைத்து மீண்டும் விட்ட இடத்திலிருந்து தொடருங்கள்.]


5 comments:

  1. தோழர் வணக்கம், இந்த இடுகை மிகவும் சுவரஸ்யமாக இருக்கிறது
    பார்ப்பதர்கான வசதியில்லை.
    எனினும் நல்லது வாழ்துக்கள்.

    ReplyDelete
  2. நண்பர் காமராஜ், வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
    'பார்ப்பதற்கான வசதி இல்லை' என்றால் என்னவேன்றுப் புரியவில்லை. சற்று விளக்கவும்.

    ReplyDelete
  3. வந்துட்டேன்! ஓ, இப்படி ஒரு தளம் வைச்சு இது போன்ற பதிவுகளை வழங்கிட்டு இருக்கிறீங்களா? மக்கள் கண்களில் படாதே :)) அதான் துரதிருஷ்டவசம் என்பதோ?

    இன்னும் காணொளி பார்க்க வில்லை பார்க்கிறேன். நல்ல சேவை, தொடர்ந்து செய்யுங்க.

    உங்கள் தளத்தில ஒரு 'பாப் அப்' ஒண்ணு திறக்குதே - ஏதாவது விட்ஜெட் செய்யும் என்னான்னு பாருங்க. நன்றி!

    ReplyDelete
  4. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர் இயற்கையை நேசிப்பவரே,
    எனக்கு எப்போதும் டாகுமண்டரி படங்கள் பார்ப்பதில் விருப்பம் அதிகம். அதிலும் இயற்கை, அறிவியல், வானவியல் போன்றவற்றில் அளவுக்கடந்த ஆர்வம். நாம் கண்ட நல்லவைகளைப் பிறர்க்கும் காண்பிக்க நாட்டம். எல்லோரும் பார்கிறார்கள். தமிளிஷ் , தமிழ் 10 போன்றவற்றில் வோட்டும் போடுகிறார்கள். ஆனால் கருத்து கூறுவது மட்டும் குறைவு. வானவியல் பற்றிய பதிவுகளை ' பிரபஞ்சப்ப்ரியன்' வலைப்பூவில் பார்க்கலாம். http://prabanjapriyan.blogspot.com/ மீண்டும் வருக.

    ReplyDelete
  5. நிறைய டாகுமெண்டரிகள் பார்ப்பீங்கன்னா, யூட்யுப்ல தேடுங்க நிறைய கிடைக்கும், அண்மையில் எனக்கு காணக் கிடைத்த documentaries are amazing, you can look for those links at this post in comment section அபோகலிப்டோ என் பார்வையில்: Apocalypto...! Enjoy!

    ReplyDelete