Thursday, 3 September 2009

தண்ணீர்.... தண்ணீர் ! (வீடியோ)

தண்ணீரை..... பார்க்காத நாளில்லை! பருகாத பொழுதில்லை! அது இல்லாமல் உலகில்லை! நம் வாழ்வோடு பின்னிப் பிணைந்து, அத்தியாவசியப் பொருளாக உள்ள இந்த நீரைப்பற்றி நமக்கு எவ்வளவு விஷயங்கள் தெரியும்? நண்பர் சென்ஷியின் வலைப்பூவில் உள்ள மரியாதைக்குரிய அமரர் நாகேஷின் வானொலிப் பேட்டியில் அவர் , " நமக்கு எத்தனைப் பற்கள்? என்று யாரவது கேட்டால், உடனே '32' என்று உடனே பதில் கூறுகிறோம். என்றைக்காவது அந்த 32 பற்களையும் எண்ணிப் பார்த்திருக்கிறோமா? " என்றுக் கேட்டாரே, அதுதான் நினைவுக்கு வருகிறது! அதுப்போல 'தண்ணிக்குடி, தண்ணிப்புடி, தண்ணியடி' என்று தினந்தோறும் அதை உபயோகிக்காமல் இருந்ததில்லை. ஆகவே அதைப் பற்றி 'top to bottom ' தெரிந்துகொள்ளவேண்டும் என்று நினைத்ததுண்டா? (நான் சொல்லுவது எல்லோருக்கும் அல்ல) இதோ, அதற்கான நேரம் வந்துள்ளதாக நினைத்துக் கொள்ளுங்கள்.. 'Water:The Great Mystery' என்ற வீடியோவைப் பார்க்க நேர்ந்தது. அதில் கூறப்பட்ட விவரங்கள் என்னை மிகவும் கவர்ந்தது. அதை உங்களுடனும் பகிர்ந்துக்கொள்ளவே இந்தப் பதிவு. நீங்களும் பார்த்து பார்த்து, மற்றவர்களும் பார்த்து தெரிந்துக்கொள்ள வோட்டும் போடுங்கள்.

தண்ணீரைப் பற்றிய பதிவாதலால், என்ன எழுதலாம் என்று நினைதுக்கொண்டிருந்தப்போது, முன்னுரை கூற முன்வந்தது இந்த வீடியோ. நானாக எழுதுவதைக் காட்டிலும், இது நன்றாக போய்ச்சேரும்(!) என்பதால் அதையும் சேர்த்து விட்டேன். திருப்தியா? என்று மறக்காமல் கூறுங்கள். (இதுப் போல ஒரு டீச்சர் கிடைத்தால், நம்ம பசங்க ஒருத்தரும் கிளாஸ்க்கு கட்அடிக்கமாட்டார்கள், மற்றும் நூறு சதம் பாஸ்!)



முன்னுரை by ஸ்பெஷல் டீச்சர்!



இப்போது மெயின் படம்!

1 comment:

  1. மேற்கத்திய நாடுகளில் ஒவ்வொரு துறையிலும் தன் வாழ் நாளை அர்பணித்தவர்கள் இருக்கிறார்கள். இந்தியர்களுக்கு வாழ்வியல் போராட்டம் காரணாமாக நிறைய விஷயங்களைப் பற்றி மேலோட்டமாக பயில வேண்டி இருக்கிறது. அதுதான் பிரச்சினை. ஒரு குறிப்பிட்ட பூச்சி இனத்தை தன் வாழ்நாள் முழுவதும் ஆராய்ச்சி செய்பவர்கள் அங்கே இருக்கிறார்கள். இங்கு அப்படி ஒருவர் இருந்தால் அவரை மட்டம் தட்டியே கொன்று விடுவேம். மெதுவாக அந்த நிலை மாறி வருகிறது. இன்னும் பல வருடங்கள் நாம் காத்திருக்க வேண்டும்.

    ReplyDelete