Monday 22 June 2009

உலக மக்கள்தொகை பூஜியம்! : மனித இனம் இல்லாத ராட்ஜியம்! (வீடியோ)


உலக மக்கள் தொகை பூஜியம்!

உலகில் மனிதன் உயரினம் என்று கைக்காட்ட ஒருவரும் இல்லை!

அதன் பிறகு இவ்வுலகம் எப்படி இருக்கும்? என்னவாகும்?

என்ன ஒரு கற்பனை! அதையும் விஞ்ஞானபூர்வமாக கற்பனை செய்துள்ளார்கள்.


நம் பூமிக்கிரகம், தொடர் மாற்றங்களுக்கு உட்பட்டது. மனிதன் இவ்வுலகில் வாழ்ந்த வரையில் பல கோடி மைல்கள் வான்வெளியில் பறந்துள்ளான். பல மைல்கள் நிலத்தை குடைந்து சென்றுள்ளான். கண்டங்களை உருவாக்கி, விளை நிலங்களை செப்பனிட்டு, விவசாயம் செய்துள்ளான். உலக அதிசயங்கள் என்று கூறும் அளவிற்கு, அருமையான கட்டிடங்களை நிர்மாணித்துள்ளான். உலகின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று தெரிந்தும், அணு மின்நிலையங்களை நிறுவி விட்டான். எல்லாவற்றிற்கும் மேலாக நீர், நிலம், காற்று, ஒன்றயும் விட்டு வைக்காமல், எல்லாவற்றையும் மாசு படுத்திஉள்ளான்.

இவ்வளவையும் செய்துவிட்டு, திடீர்ரென்று, ஒரே வினாடியில், மொத்த மனித இனமே பூண்டோடு மறைந்து விட்டால்........? அவன் விட்டு செல்லும் இவ்வுலகம் என்னவாகும் என்பதை நேஷனல் ஜியோகரபிக் சேனல் உருவாகிய ஆவணப்படம் தான், நாம் காணவிருக்கும் ' AFTERMATH: POPULATION ZERO '.

இதுவும் சுமார் ஒன்றரை மணி நேரம் ஓடக்கூடிய வீடியோ இது. ஆகவே நேரத்தை ஒதுக்கிக்கொண்டு பாருங்கள்.
Part -1





Part - 2





Part - 3





Part - 4





Part - 5





Part - 6





Part - 7





Part - 8





Part - 9



ஏதாவது எழுதுங்களேன்.

Friday 19 June 2009

என் அழகிய பூமித்தாய். ( வீடியோ)

என்னதான் நம்மை திட்டினாலும், அடித்தாலும், இவ்வுலகில் நம்மை பத்து மாதம் சுமந்து பெற்ற அருமைத்தாய், அவளுக்கு நிகர் அவளேத்தான். ஒருவேளை அவள் இல்லையென்றால், நம்மீது அன்புசெலுத்த ஒரு சித்தியோ அல்லது யாரோ ஒரு பெண்மணி வரக்கூடும். நாமும் ' அம்மாவென்றழைக்காத உயிர் இல்லையே' என்று நம் இசைஞானியின் உபயத்தால் பாடவும் கூடும்.

ஆனால், நாம் வாழும், நம்மையெல்லாம் கோடிகணக்கான ஆண்டுகள் பரிணமித்து , உருவாக்கி, வாழவைக்கும் பூமித்தாய்,... அவளுக்கு நிகர் வேறு யார்? இன்றுவரை, மனித அறிவிற்கு தெரிந்தவரை, பூமியல்லாத வேறு இடத்தில், நாம் இப்போது போல, சட்டை, பனியன் இல்லாமல் ஆதிமனிதன் போல வாழ முடியுமா? ஒருவேளை, இப்போது உலக நாடுகள், (ரகசியமாக) முயற்சிப்பதுப்போல , நிலவிலோ அல்லது வேறு கிரகத்திலோ வாழ முயன்றாலும், இதைப்போல சுதந்திரமாக, இயற்கையாக, வாழ இயலுமா? ஒருவேளை வாழ முயன்றாலும், பிராணவாயுக்கவசத்தோடு, பயந்து நடுங்கி, கட்டுப்பாடுடன்தான் வாழ நேரிடும்.

ஆனால், நம்மிடம் வேறு எதையும் எதிர்பார்க்காமல், நமக்கு பாதுகாப்பும், மகிழ்ச்சியையும், பல்வேறு நலன்களையும் தரும் நம் பூமித்தாயை என்னவென்று போற்றுவது? நம்மைமட்டுமல்லாது கோடிக்கணக்கான ஜீவராசிகளை உருவாக்கி வாழ்வித்து வளர்த்து வரும் ஒரு மேகாதாய் அவள்.
இடைஇடையே, நமக்கு வரும் சில இயற்கை உபாதைகள் போல, சில பல இயற்கை அழிவுகள் ஏற்பட்டு இருக்கலாம். ( நம் தாய் நம்மை கண்டிப்பது போல) ஆனால் அதை தடுக்க அவளாலும் முடியாது, நம்மாலும் இதுவரை முடியவில்லை. ஒருவேளை வருங்காலத்தில், அறிவியல் வளர்ச்சியால் ஏதாவது செய்ய முடிந்தால் நல்லது. இன்னொன்று இங்கு குறிபிட்டே ஆகவேண்டும். பல உபாதைகள் நம்மால் வந்ததுதான்.

இது எல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், நம் பூமித்தாயின் அழகு உள்ளதே, அதை வர்ணிக்க வார்த்தைகளோ ,எழுத்துக்களோ இல்லை. பார்த்தால்தான் ரசித்து மகிழ முடியும். அதற்காகத்தான் இந்த காணொளி!

நிறைய பேர் 'BBC இன்', 'Richard Attenbororough' வழங்கிய 'Planet Earth' பார்த்து ரசித்திருப்பீர்கள். அது போலத்தான் இதுவும் 'BBC, Walt Disney & Discovery ' சேர்ந்து வழங்கிய ' Earth ' என்ற அருமையான காணொளி. இதில் உள்ள நேர்த்தியைக்கண்டு அசந்துப்போனேன். என்ன ஒரு ஒளிப்பதிவு! ஆஹா!

ஆகவே இதை நம் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளவேண்டும் என்று , நானே ' You Tube 'இல் அப்லோட் செய்து உங்களுக்காக வழங்குகின்றேன். இதற்கு முன் போட்ட பதிவுகளும் நான் அப்லோட் செய்தது தான். ( you tube இல் அப்லோட் செய்யாமல் நாமே நம் ப்ளோகில் அப்லோட் செய்ய முடியாதா? யாராவது விளக்கம் கூற முடியுமா?)

ஆகவே நண்பர்களே, இது பத்து பகுதிகளைக்கொண்ட காணொளி. ஐந்து இப்போது , மாற்ற ஐந்து பிற்பாடு...உங்கள் பின்னுட்டங்களை பார்த்தப்பின்பு.
OK. Lights off! Start projector!
{படத்தின் நீள அகலங்கள் கம்மி ஜாஸ்தியாக இருந்தால், படத்தின் மீது 'Doubble Click' செய்து you tube மூலமாக பார்க்கவும்.}


Part - 1


Paet - 2


Part - 3



Part - 4



Part - 5





Wednesday 17 June 2009

பூமித்தாயின் மரணம்.

பிறப்பு என்று ஒன்று இருந்தால், இறப்பு என்று ஒன்று உண்டு. அதன்படி நம்மையெல்லாம் வாழவைத்துக்கொண்டிருக்கும் நம் பூமித்தாயும் ஒருநாள் இல்லாமல் போவாள். ஆனால் அதைக்கண்டு மனம் பதைக்க நாம் இருக்கப்போவதில்லை. இதைப்பற்றிய ஒரு வீடியோவை காண நேர்ந்தது. அதை எல்லோரிடமும் பகிர்ந்துக்கொள்ள, மிகவும் சிரமப்பட்டு அப்லோட் செய்துள்ளேன். நீங்களும் பார்த்து, குறிப்பாக மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள். முக்கியமாக உங்கள் கருத்தை மறக்காமல் பின்னூட்டமிடுங்கள். வரவேற்பை பொறுத்து மீண்டும் சந்திப்போம்.

Wednesday 3 June 2009

சுனாமி - உலகை உலுக்கிய பேரலை.



அன்று பாக்ஸ்சிங் டே. நேற்றைய கிறிஸ்துமஸ் தின கொண்டாட்டத்தின் மிச்சம்... ஹாங் ஓவர். பின் மண்டையில் வற்புறுத்தல். லய்ம் டீ குடித்துக்கொண்டே சன் நியூஸ் பார்க்கத்தொடங்கினேன்.

காலை எட்டு மணி இருக்கும் என்று நினைக்கிறேன், ' சென்னையில் கடல் நீர் உள்வாங்கியது', என்று பிளாஷ் நியூஸ் போட்டார்கள். மந்தமாக பார்த்துக்கொண்டிருந்தேன். ( இதற்கு மேல் இப்படி குடிக்கக்கூடாது.)மீண்டும் சிறிது நேரத்தில், ' சென்னையில் கடல் நீர் உட்புகுந்தது, மக்கள் பதற்றம்' என்று பிளாஷ் நியூஸ் வந்தது. அப்போதுதான் பொறி தட்டியது. எங்கோ,எப்போதோ படித்தது நியூரான்களில் நிழலாடியது. ஐயோ, இது சுனாமியின் சுனாமியின் அறிகுறி அல்லவா! தேநீர் கோப்பை நடுங்க , பூகோள பட்டதாரியான என் தம்பியை அழைத்தேன். வீட்டின் அனைத்து அறைகளிலிருந்தும் மிரட்சியாக எல்லோரும் எட்டிப்பார்த்தார்கள். ' ஏன்டா, சுனாமி ஜப்பானில் மட்டும் தானே வரும்? நம்ம நாட்டில் கூடவா?' என்று பதறினேன். அதற்கு அவன் ' சுனாமி, நீர் உள்ள எல்லா இடத்திலும் வரும், அதற்கு என்ன இப்போ?' என்று கேட்டான். நான் டீவீயை நோக்கி கை நீட்டினேன். அவனும் உறைந்து போனான்.
அதற்கு மேல் வந்த செய்திகளை பார்க்க,பார்க்க மனம் நடுங்கியது. பெங்களூரில் இருந்து வேளாங்கண்ணிக்கு குடும்பத்தோடு சென்ற ஒரு நண்பரின் நினைவு வந்து, அவரின் செல்லுக்கு போன் போட்டேன். ஆனால் இதுவரையில் அவரிடம் இருந்து தகவல் இல்லை. எனக்கும் அவரை பற்றி விசாரிக்க துணிவு இல்லை.

தற்போது சுனாமி பற்றிய ஒரு ஆவணப்படம் ஒன்று காண நேரிட்டது. மிகவும் அருமையாக தயாரிக்கப்பட்டுள்ள அதை கண்டவுடன், அந்த கொடிய டிசம்பர் 26, ஞாபகம் வந்தது. நிறைய பேர் அதை பார்த்திருப்பீர்கள் என்றாலும், பார்க்காதவர்களுக்காக அதை பதிவு செய்கிறேன்.