Wednesday 3 June 2009

சுனாமி - உலகை உலுக்கிய பேரலை.



அன்று பாக்ஸ்சிங் டே. நேற்றைய கிறிஸ்துமஸ் தின கொண்டாட்டத்தின் மிச்சம்... ஹாங் ஓவர். பின் மண்டையில் வற்புறுத்தல். லய்ம் டீ குடித்துக்கொண்டே சன் நியூஸ் பார்க்கத்தொடங்கினேன்.

காலை எட்டு மணி இருக்கும் என்று நினைக்கிறேன், ' சென்னையில் கடல் நீர் உள்வாங்கியது', என்று பிளாஷ் நியூஸ் போட்டார்கள். மந்தமாக பார்த்துக்கொண்டிருந்தேன். ( இதற்கு மேல் இப்படி குடிக்கக்கூடாது.)மீண்டும் சிறிது நேரத்தில், ' சென்னையில் கடல் நீர் உட்புகுந்தது, மக்கள் பதற்றம்' என்று பிளாஷ் நியூஸ் வந்தது. அப்போதுதான் பொறி தட்டியது. எங்கோ,எப்போதோ படித்தது நியூரான்களில் நிழலாடியது. ஐயோ, இது சுனாமியின் சுனாமியின் அறிகுறி அல்லவா! தேநீர் கோப்பை நடுங்க , பூகோள பட்டதாரியான என் தம்பியை அழைத்தேன். வீட்டின் அனைத்து அறைகளிலிருந்தும் மிரட்சியாக எல்லோரும் எட்டிப்பார்த்தார்கள். ' ஏன்டா, சுனாமி ஜப்பானில் மட்டும் தானே வரும்? நம்ம நாட்டில் கூடவா?' என்று பதறினேன். அதற்கு அவன் ' சுனாமி, நீர் உள்ள எல்லா இடத்திலும் வரும், அதற்கு என்ன இப்போ?' என்று கேட்டான். நான் டீவீயை நோக்கி கை நீட்டினேன். அவனும் உறைந்து போனான்.
அதற்கு மேல் வந்த செய்திகளை பார்க்க,பார்க்க மனம் நடுங்கியது. பெங்களூரில் இருந்து வேளாங்கண்ணிக்கு குடும்பத்தோடு சென்ற ஒரு நண்பரின் நினைவு வந்து, அவரின் செல்லுக்கு போன் போட்டேன். ஆனால் இதுவரையில் அவரிடம் இருந்து தகவல் இல்லை. எனக்கும் அவரை பற்றி விசாரிக்க துணிவு இல்லை.

தற்போது சுனாமி பற்றிய ஒரு ஆவணப்படம் ஒன்று காண நேரிட்டது. மிகவும் அருமையாக தயாரிக்கப்பட்டுள்ள அதை கண்டவுடன், அந்த கொடிய டிசம்பர் 26, ஞாபகம் வந்தது. நிறைய பேர் அதை பார்த்திருப்பீர்கள் என்றாலும், பார்க்காதவர்களுக்காக அதை பதிவு செய்கிறேன்.




No comments:

Post a Comment