Tuesday, 27 October 2009

அணுஆயுதத் தாக்குதலுக்கு அடுத்த கணங்கள்...(வீடியோ)




நம்ம சாதா வெடிகுண்டுகளோடு அணுகுண்டை ஒப்பிட்டுப்பார்த்தால், மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசத்தைக் காணலாம். பல ஆயிரம் மடங்கு வித்தியாசம். இன்னும் மறக்கமுடியாத அந்த நாட்களை ஜப்பானின் ஹிரோஷீமா & நாகசாகி நகரங்களைக் கேட்டால் தெரியும். நம்ம தீபாவளிக்கு அல்லது பெரிய கோவில் திருவிழாக்களில் வெடிக்கும் பெரிய வெடியை நம்மில் பலர்  பார்த்திருப்போம். குழாய்ப் போன்று ஏதோ உபயோகித்து வெடிப்பார்களே, அதுதான். அதை வெடிக்கும் போது கொஞ்சம் அருகில் இருப்பவர்களுக்கு அதன் தாக்கம் தெரிந்திருக்கும். அந்த அதிர்ச்சி அலை ஆளையே தள்ளுவதை உணர்ந்திருப்பார்கள். இதுவே இப்படியென்றால் 5,00,000 டன் TNT வெடிமருந்தை வெடித்தால் என்னவாகும் என்று நினைத்துப்  பார்க்கவும். அதுதான்  சாதாரண சிம்பிள் அணுகுண்டு!

சரி,  இந்த அணுகுண்டு வெடித்தால் என்னதான்  நடக்கும்? எதற்கு இத்தனை நடுக்கம்? என்ன குடியா மூழ்கிவிடும்?.... வாங்க பாக்கலாம்.
  • அணுகுண்டுகளை பலவிதமாக வெடிக்கவைக்கலாம்: தரைக்கு மேல் கொஞ்ச உயரத்தில்,... சுகுரா தரைமேலையே,... தண்ணிக்கு உள்ளே. இவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனி விளைவுகள் உண்டு. ஆனால் பாதிப்பு 'ஏறக்குறைய சொர்கம்தான்!'
  • வெடித்தவுடன்  அணுக்கருப்பிளவு/அணுக்கருப்புணர்வு போன்றவற்றால்  ( ரொம்ப உஷாராக டைப் பண்ணவேண்டிஇருந்தது) ஒரு மிகப்பெரிய நெருப்புப்பந்தாக உருவாகி, கண்மூடித்திறப்பதர்க்குள்  கொஞ்சம் டிம்மாகி ,மீண்டும் 900 அடி உயரத்திற்கு, சுமார் 7,000° C. வரை வெப்பம் உயர்ந்து சும்மா ஜொலிக்கும்! (தண்ணீர் கொதிக்க 100 ° C தானே?)
  • அதன்பின்னே கிளம்பும்  அந்த அதிர்ச்சி அலை.... White Hot என்னும் நிலைக்கு சூடாக்கப்பட்ட காற்றுக்குமிழுக்குள்  மிகவும் நெருக்கமாக அடைக்கப்பட்ட Shock Wave! ஒரு இரும்பு சுவரைப்போல் மிக வேகமாக விரையும்! 
  •  அந்த அதிர்ச்சி அலைக்குப்பின் ஒரு  மகாக் காற்று! பூஜ்ய நிலம் எனப்படும் Ground Zero வில் இருந்து, ஒரு மைல் சுற்றுவட்டாரத்திற்கு சுமார் 800 மைல் வேகத்தில் துவம்சம் செய்யும். இதில் சில இடங்களில் எதிர்க்காற்றும் சேர்ந்துக்கொள்ளும். பின்பு போகப்போக மூன்று மைல் தொலைவுக்குப்பிறகு வலுவிழக்கும்.
  • ஐந்து மைல் தூரத்தில் இருந்துப் பார்த்தால் அந்த இடம் நூறு சூரியன்கள் இருப்பதுப்போல் பிரகாசிக்கும்.
  • குண்டு வெடித்தவுடன் , அரை மைல் வட்டாரத்திற்குள் எல்லாம் வெப்பத்தினாலும் நெருப்பினாலும் உருத்தெரியாமல் அழிக்கப்படும். பின்பு வரும் அதிர்ச்சி மற்றும் காற்று அலைகளினால் மேலும் அழிவு!
  • இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்ப்போல் வரும் அந்த அணுக்கதிர்வீச்சு எனப்படும் காமாக்கதிர்கள்! இது சம்பவ இடத்தில இருந்து அரை மைல் வட்டாரத்தில் உள்ள, இரவ்டு அடி கான்க்ரீட் செங்கல் சுவற்றிற்குள் ஒளிந்து, மற்ற எல்லாவற்றிற்கும் தப்பினவர்களை தீர்த்துவிடும் அல்லது மிகவும் பயங்கர கதிர்வீச்சு தாக்குதலுக்கு உள்ளாக்கும்! இதுவும் போகப்போக குறைந்து இரண்டு மைல் தூரத்தில் உள்ளவர்களை தீண்டாது.
  • இவையெல்லாம் தரைக்கு மேல் கொஞ்சதூரத்தில் வெடித்தால் நிகழும் தாக்கங்கள். இதுவே தரைமேல் வெடித்தால் Crater எனப்படும் மிகப்பெரிய பள்ளத்தை ஏற்ப்படுத்தும்! மற்றவை மேலே இருந்து வெடித்ததில் இருந்து கொஞ்சம் குறைவுப்படும்.
  • நீரில் வெடித்தால், அதன் தாக்கம் கொஞ்சம் குறையும். ஆனால் சுனாமிப் போன்ற அழிவு அலையையும் , அது செல்லுமிடமெல்லாம் கதிரியக்க நீரையும் கொண்டு சென்று மாசுப்படுத்தும்!
You Tube இல் உள்ள ஒரு சில காணொளிகளைப் பார்க்கலாமா?




இதையும் கொஞ்ச நேரம் செலவுப் பண்ணிப் பாருங்கள். அருமையான வீடியோ!



சரி. இதே அணுகுண்டு அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்க்டன் டிசி யைத் தாக்கினால் என்னவாகும் என்று ஹிஸ்டரி சேனல் நிறுவனத்தினர் கற்பனை செய்து
' Day After Disaster' என்ற காணொளியை உருவாகி உள்ளனர். அது அவர்களால்தான் முடியும். இது அமெரிக்கமக்கள் மட்டுமல்ல, எல்லோரும் பார்க்கவேண்டிய வீடியோ. வாங்க பார்க்கலாம்.

[ 72 நிமிடங்களுக்குப் பிறகு வீடியோ நின்றுவிடும். அப்போது உங்கள் ரூட்டர் / மோடெம்- மின் இணைப்பைத் துண்டித்துவிட்டு, ஒரு நிமிடம் கழித்து இணைத்து, மீண்டும் விட்ட இடத்திலிருந்து தொடருங்கள்.]