Showing posts with label Volcanic Ash. Show all posts
Showing posts with label Volcanic Ash. Show all posts

Thursday, 27 May 2010

நடுங்கவைத்த நடுவான விபரீதம் !



சில நாட்களுக்கு முன்  மங்களூரில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குளாகி தீப்பிடித்து ஏறக்குறைய 160 உயிர்கள் இழக்கப்பட்டுள்ளன. மனதை மிகவும் வருந்தச் செய்யும் நிகழ்ச்சியாகும். விபத்தில் தங்களுக்கு அருமையானவர்களை இழந்த எல்லோருக்கும் நம்முடைய ஆழ்ந்த அனுதாபங்கள்  உரித்தாகுக. இவ்வளவு உயிர்களை பலிக்கொண்டு, மங்களூர் விமான நிலைய ஓடுத்தளம் மிகவும் ஆபத்தானது என்று தெரிந்துக் கொள்ள நேர்ந்தது மிகவும் துரதிஷ்டம்.இனியாவது வேறொரு நல்ல பாதுகாப்பான இடத்தில் விமான நிலையத்தை அமைத்து, எதிர்காலத்தில் இத்தகைய அவலங்களை தவிர்க்கவேண்டும்.

சென்ற ஒரு மாதமாக உலக, குறிப்பாக அமெரிக்க மற்றும் ஐரோப்பிய விமான போக்குவரத்தை செயலிழக்கச் செய்தது ஒரு எரிமலை வெடிப்பு ! எரிமலை  வெடித்தால் என்ன?, கொஞ்ச தூரமாகப் சுற்றிக்கொண்டு பறந்தால் போயிற்று? ஆனால்  இங்குத்தான் சவாலே இருக்கிறது . பிரச்சனை எரிமலையினால் அல்ல. அது வெளியேற்றிய சாம்பலால்தான் பேரும் சோதனை.

இந்தக் காலத்து விமானங்கள் மேகம், இடி, மின்னல் போன்ற எல்லாவற்றையும் சமாளித்து பரந்து வருகின்றன. ஆனால் இந்த எரிமலைச் சாம்பல் என்றவுடன் நடுங்கி தரையிறக்கப்பட்டன! அப்படி என்ன மோசம் இந்த சாம்பல் ? சென்ற மார்ச்  மாதம் 20 ஆம் தேதி ஆரம்பித்தது இந்த களேபரம். ஆம், ஐஸ்லாந்து நாட்டின் தென் கோடியில் உள்ள ' 
Eyjafjallajökull ' என்றப் பெயருடைய எரிமலை முதலாவதாக சீறத் துவங்கியது. (அதற்கும் முன்னாடி 920, 1612, மற்றும் 1821 லிருந்து 1823 வரை) 
[அந்த எரிமலையின் பெயரை தமிழில் எழுத்தும் விளையாட்டுக்கு நான் வரவில்லை. நிறைப்பேர் அந்தப் பெயரை உச்சரிக்க  முயற்சித்திருக்கிறார்கள். அதைப்  பார்க்க இங்கே செல்லவும் .] 


தரையில் ஒரு எரிமலை வெடித்து சிதறி, சாம்பலையும் நெருப்பையும் கக்கும்போது, அதன் சாம்பல்பல ஆயிரம் அடிகளுக்கும் மேல் பரவி இருக்கும். இதைப்பற்றி தெரியாமல் எதாவது விமானம் அதனூடே செல்ல நேரிட்டால், அதன் கதி என்னவாகும்? இதை நான் வார்த்தைகளால் விளக்குவதைவிட கீழ் வரும் வீடியோக்களில் அருமையாக விளக்கப்பட்டுள்ளன.


பிபிசி இன் இணையதளம் கொடுக்கும் விளக்கம் இங்கே 


இதோ அந்த காணொளிகள்......





ஆமாம்... இதற்கு முன்னரே இதுபோன்ற பேராபத்து நிகழ்ந்துள்ளதா? எங்கே?... எப்போது?....
ஆம்! 1982 ஆம் வருடம், ஜூன் 24 ஆம் தேதி , லண்டன் மாநகரிலிருந்து, நியுசிலாந்தின் ஆக்லேன்ட் நகருக்கு சென்ற, பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம்,போகும் வழியில்  எரிமலைச் சாம்பல் எனும் பேராபத்தில் சிக்கியது. அதில் பயணித்த பயணிகள் 248 பேர். விமான ஊழியர்கள் 15 பேர். போயிங் 747 வகையைச் சேர்ந்த அந்த விமானம், லண்டனில் புறப்பட்டு பாம்பே(மும்பை), சென்னை,(நம்ம ஆளுங்க யாராவது ஏறினாங்களா?!), கோலாலாம்பூர், பெர்த், மெல்போர்ன் போன்ற இடங்களில் நின்று(நம்ம ஊர் பஸ் தேவல!) ஆக்லேன்ட் போய்ச் சேர்ந்திருக்கவேண்டும். ஆனால்... நடந்தது என்ன...? கோலாலாம்பூர் விட்டு இந்தோனேசியாவின் மேல் பறக்கும் போது கீழே வெடித்துச்  சிதறிய எரிமலையின் சாம்பலில் சிக்கியது....
ஆக்லேன்ட் நகர பொருட்காட்சியில்  உள்ள, அந்த விமான எஞ்சினின் பாதிக்கப்பட்ட பாகங்கள்.
அந்தப் பதினைந்துப்பேர்...
ஹாலிவுட்டில் விமான விபத்து சம்மந்தமான எத்தனையோ படங்கள் வந்துள்ளன, நாமும் பார்த்திருக்கிறோம் .... ஆனால் இங்கிலாந்தின் FIVE Channel நிறுவனம் தயாரித்து ஒளிப்பரப்பிய 'Volcanic Ash: Flight of Terror' என்ற விவரணப் படத்தை கண்டு விக்கித்துப் போனேன்.அவ்வளவு தத்ரூபம் & த்ரில்! ஒரு தொலைகாட்சி படத்திற்கே அவர்கள் எடுத்துக்கொள்ளும் சிரத்தையையும், கவனத்தையும் கண்டு, நம்ம ஊர் 'உலகத்தர மாபெரும் வெற்றிப்படங்களை' நினைத்து அழுவதா,சிரிப்பதா என்று தெரியவில்லை. 
சரி நண்பர்களே, இனி அந்தக் காணொளியை நீங்களும் கண்டு களியுங்கள். 
எச்சரிக்கை...... !
" எல்லோரும் தங்களின் சீட் பெல்டுகளை அணிந்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்"
  +-