Monday 22 June 2009

உலக மக்கள்தொகை பூஜியம்! : மனித இனம் இல்லாத ராட்ஜியம்! (வீடியோ)


உலக மக்கள் தொகை பூஜியம்!

உலகில் மனிதன் உயரினம் என்று கைக்காட்ட ஒருவரும் இல்லை!

அதன் பிறகு இவ்வுலகம் எப்படி இருக்கும்? என்னவாகும்?

என்ன ஒரு கற்பனை! அதையும் விஞ்ஞானபூர்வமாக கற்பனை செய்துள்ளார்கள்.


நம் பூமிக்கிரகம், தொடர் மாற்றங்களுக்கு உட்பட்டது. மனிதன் இவ்வுலகில் வாழ்ந்த வரையில் பல கோடி மைல்கள் வான்வெளியில் பறந்துள்ளான். பல மைல்கள் நிலத்தை குடைந்து சென்றுள்ளான். கண்டங்களை உருவாக்கி, விளை நிலங்களை செப்பனிட்டு, விவசாயம் செய்துள்ளான். உலக அதிசயங்கள் என்று கூறும் அளவிற்கு, அருமையான கட்டிடங்களை நிர்மாணித்துள்ளான். உலகின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று தெரிந்தும், அணு மின்நிலையங்களை நிறுவி விட்டான். எல்லாவற்றிற்கும் மேலாக நீர், நிலம், காற்று, ஒன்றயும் விட்டு வைக்காமல், எல்லாவற்றையும் மாசு படுத்திஉள்ளான்.

இவ்வளவையும் செய்துவிட்டு, திடீர்ரென்று, ஒரே வினாடியில், மொத்த மனித இனமே பூண்டோடு மறைந்து விட்டால்........? அவன் விட்டு செல்லும் இவ்வுலகம் என்னவாகும் என்பதை நேஷனல் ஜியோகரபிக் சேனல் உருவாகிய ஆவணப்படம் தான், நாம் காணவிருக்கும் ' AFTERMATH: POPULATION ZERO '.

இதுவும் சுமார் ஒன்றரை மணி நேரம் ஓடக்கூடிய வீடியோ இது. ஆகவே நேரத்தை ஒதுக்கிக்கொண்டு பாருங்கள்.
Part -1





Part - 2





Part - 3





Part - 4





Part - 5





Part - 6





Part - 7





Part - 8





Part - 9



ஏதாவது எழுதுங்களேன்.

7 comments:

  1. Nalla pathivu.

    ReplyDelete
  2. நன்றி நண்பரே. ஆனால் உங்களின் பெயரயும் குறிப்பிட்டு இருக்கலாமே. நானும் உங்களின் பேரிட்டு நன்றி கூறி இருப்பேன். இது போன்ற சில அறிவார்ந்த விஷயங்களை பகிர்ந்து கொள்ளத்தான் இந்த வலைப்பதிவை தொடங்கினேன். ஆனால் நீங்களே பாருங்கள், இவ்வளவு நாட்கள் கழித்து உங்களின் மூலமாக ஒரே ஒரு பின்னுட்டம் வந்துள்ளது. ஒரு வலைபதிவருக்கு இத்தகைய கருத்துக்கள் தான் ஊக்கம் தரும். நம்மவருக்கு இத்தகைய விஷியங்கள் பிடிக்கவில்லை போலும். ஆனாலும் இன்னும் சில பதிவுகளை போட்டுப்பார்பேன். வரவேற்ப்பு இருந்தால் தொடரலாம். மீண்டும் உங்களின் கருத்துக்கு நன்றி. அடுத்த முறை சந்திப்போம். Keep in touch.

    ReplyDelete
  3. நான் scientific american என்ற இதழில் படித்த கட்டுரையைப் பற்றி எழுதியிருந்தேன்.AFTERMATH: POPULATION ZERO பார்க்க ஆர்வமாக இருக்கிறது. தகவலுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  4. நீங்கள் எவ்வளவு பேர் இக்கட்டுரையைப் பார்க்கிறார்கள் என கவலை கொள்ள வேண்டாம். நல்ல கட்டுரைகள் என்றும் படிக்கப்படும். நான் உங்கள் பதிவுகள, என் பிளாக்ல் இணைக்க விரும்புகிறேன். உங்கள் பதிவுகள் அருமை. நீங்கள் tamilmanam, tamilsh, tamil10 போன்ற வலைத்தளங்களில் உங்கள் கட்டுரைகளை இணையுங்கள்

    ReplyDelete
  5. இது போன்ற சில அறிவார்ந்த விஷயங்களை பகிர்ந்து கொள்ளத்தான் இந்த வலைப்பதிவை தொடங்கினேன்.

    Keep on going.

    ReplyDelete
  6. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி பின்னோக்கி. தொடர்ந்து உங்களின் கருத்துக்களை எதிர்பார்கிறேன்.

    ReplyDelete
  7. கருத்துக்கு நன்றி கிருஷ்ணா. Please often visit my blogs and don't forget to give your valuable opinions on them. Why don't you write some thing and share your knowledge too?

    ReplyDelete