என்னதான் நம்மை திட்டினாலும், அடித்தாலும், இவ்வுலகில் நம்மை பத்து மாதம் சுமந்து பெற்ற அருமைத்தாய், அவளுக்கு நிகர் அவளேத்தான். ஒருவேளை அவள் இல்லையென்றால், நம்மீது அன்புசெலுத்த ஒரு சித்தியோ அல்லது யாரோ ஒரு பெண்மணி வரக்கூடும். நாமும் ' அம்மாவென்றழைக்காத உயிர் இல்லையே' என்று நம் இசைஞானியின் உபயத்தால் பாடவும் கூடும்.
ஆனால், நாம் வாழும், நம்மையெல்லாம் கோடிகணக்கான ஆண்டுகள் பரிணமித்து , உருவாக்கி, வாழவைக்கும் பூமித்தாய்,... அவளுக்கு நிகர் வேறு யார்? இன்றுவரை, மனித அறிவிற்கு தெரிந்தவரை, பூமியல்லாத வேறு இடத்தில், நாம் இப்போது போல, சட்டை, பனியன் இல்லாமல் ஆதிமனிதன் போல வாழ முடியுமா? ஒருவேளை, இப்போது உலக நாடுகள், (ரகசியமாக) முயற்சிப்பதுப்போல , நிலவிலோ அல்லது வேறு கிரகத்திலோ வாழ முயன்றாலும், இதைப்போல சுதந்திரமாக, இயற்கையாக, வாழ இயலுமா? ஒருவேளை வாழ முயன்றாலும், பிராணவாயுக்கவசத்தோடு, பயந்து நடுங்கி, கட்டுப்பாடுடன்தான் வாழ நேரிடும்.
ஆனால், நம்மிடம் வேறு எதையும் எதிர்பார்க்காமல், நமக்கு பாதுகாப்பும், மகிழ்ச்சியையும், பல்வேறு நலன்களையும் தரும் நம் பூமித்தாயை என்னவென்று போற்றுவது? நம்மைமட்டுமல்லாது கோடிக்கணக்கான ஜீவராசிகளை உருவாக்கி வாழ்வித்து வளர்த்து வரும் ஒரு மேகாதாய் அவள்.
இடைஇடையே, நமக்கு வரும் சில இயற்கை உபாதைகள் போல, சில பல இயற்கை அழிவுகள் ஏற்பட்டு இருக்கலாம். ( நம் தாய் நம்மை கண்டிப்பது போல) ஆனால் அதை தடுக்க அவளாலும் முடியாது, நம்மாலும் இதுவரை முடியவில்லை. ஒருவேளை வருங்காலத்தில், அறிவியல் வளர்ச்சியால் ஏதாவது செய்ய முடிந்தால் நல்லது. இன்னொன்று இங்கு குறிபிட்டே ஆகவேண்டும். பல உபாதைகள் நம்மால் வந்ததுதான்.
இது எல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், நம் பூமித்தாயின் அழகு உள்ளதே, அதை வர்ணிக்க வார்த்தைகளோ ,எழுத்துக்களோ இல்லை. பார்த்தால்தான் ரசித்து மகிழ முடியும். அதற்காகத்தான் இந்த காணொளி!
நிறைய பேர் 'BBC இன்', 'Richard Attenbororough' வழங்கிய 'Planet Earth' பார்த்து ரசித்திருப்பீர்கள். அது போலத்தான் இதுவும் 'BBC, Walt Disney & Discovery ' சேர்ந்து வழங்கிய ' Earth ' என்ற அருமையான காணொளி. இதில் உள்ள நேர்த்தியைக்கண்டு அசந்துப்போனேன். என்ன ஒரு ஒளிப்பதிவு! ஆஹா!
ஆகவே இதை நம் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளவேண்டும் என்று , நானே ' You Tube 'இல் அப்லோட் செய்து உங்களுக்காக வழங்குகின்றேன். இதற்கு முன் போட்ட பதிவுகளும் நான் அப்லோட் செய்தது தான். ( you tube இல் அப்லோட் செய்யாமல் நாமே நம் ப்ளோகில் அப்லோட் செய்ய முடியாதா? யாராவது விளக்கம் கூற முடியுமா?)
ஆகவே நண்பர்களே, இது பத்து பகுதிகளைக்கொண்ட காணொளி. ஐந்து இப்போது , மாற்ற ஐந்து பிற்பாடு...உங்கள் பின்னுட்டங்களை பார்த்தப்பின்பு.
OK. Lights off! Start projector!
{படத்தின் நீள அகலங்கள் கம்மி ஜாஸ்தியாக இருந்தால், படத்தின் மீது 'Doubble Click' செய்து you tube மூலமாக பார்க்கவும்.}
Part - 1
Paet - 2
Part - 3
Part - 4
Part - 5
No comments:
Post a Comment