'பன்றிக் காய்ச்சல்' எனப்படும் ' ஸ்வைன் ஃப்ளு' வைப் பற்றி நிறையப்பேர் பதிவுகள் போட்டுவிட்டனர். எல்லாம், எல்லோருக்கும் மிகவும் உபயோகமாக இருந்தது. அந்த வரிசையில் இன்னுமொருப் பதிவு. ஆனால் இந்த முறை அமெரிக்காவின், கலிபோர்னியாவின் புகழ்பெற்ற பெர்கேலே பல்கலைகழகத்தில் நடந்த ஸ்வைன் ஃப்ளு பற்றிய மருத்துவக் கருத்தரங்கின் வீடியோப் பதிவு!
இந்த காய்ச்சலைப் பற்றி அனேகமாக எல்லோருக்கும் தெரிந்து இருப்பதால் நேராக வீடியோவுக்குப் போய்விடலாம். இது எல்லோரயும் போய்ச்சேர மறக்காமல் வோட்டுப் போடவும். வருகைக்கு நன்றி.
இந்த காய்ச்சலைப் பற்றி அனேகமாக எல்லோருக்கும் தெரிந்து இருப்பதால் நேராக வீடியோவுக்குப் போய்விடலாம். இது எல்லோரயும் போய்ச்சேர மறக்காமல் வோட்டுப் போடவும். வருகைக்கு நன்றி.
காலத்திற்கேற்ற பதிவு! இது ஒரு அறிவிக்கப்பட்ட pandemic.. இன்னும் சரியான மருந்துகள் அறிவிக்கப்படாமல் இருப்பது அறிவியல் சாத்தியங்களை கேள்விக்குள்ளாக்குகின்றன. இல்லையா? இங்கு ஆளாளாக்கு இதை அரை, அதை கசக்கு, இப்படி குடி.. அப்படி குடி என்று ஐயடியாக்களாய் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள்!
ReplyDeleteஆமாம் ஜெகன். இங்கு இங்கிலாந்தில், இந்த நோய்க்கான அறிகுறி தென்பட்டால் மருத்துவமனைக்கு செல்லக்கூடாதாம். ஆனால் மருத்துவருக்கு போன் மட்டும் பண்ணவேண்டும். அவர்கள் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வரச்சொல்லி அங்கு மாத்திரை மருந்துகளைக் கொடுப்பார்கள். எல்லோருக்கும் ஒரே மாத்திரைத்தான்.அதன் பெயர்க்கூட Tamiflu. நன்றாகக் கேட்கிறது என்றுக்கூருகிறார்கள். அமெரிக்க அரசாங்கம்,அந்த நாட்டில் மட்டும் 90,000 பேர் இறக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளதாக அறிவித்துள்ளது. ஒன்றும் சொல்லும்படியாக இல்லை! நம்ம ஊரில் சொல்லவேண்டுமா. தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் ஆகிவிடுவார்களே! அதிலும் காகம் உட்கார பனம்பழம் விழும்போது கைத்தட்டவும் செய்வார்கள்! பீடி, சிகரட்,தண்ணி அடிப்பவர்களுக்கு இந்த நோய் தாக்காது என்று வேறு எங்கோ எழுதிவிட்டார்களாம், நிறையப் பேருக்கு கொண்டாட்டம்தான்! கருத்துக்கு நன்றி ஜெகன்.
ReplyDelete