இன்று உலகம் அழியப் போகிறது என்றால், அந்த நாள் ஒரு மனிதனுக்கு எப்படி இருந்தது என்பதைப் பற்றிய ஒரு கற்பனை. அதுவும் உலகம் ஐந்து விதமாக அழிந்தால் எப்படி? இதை வெறும் கற்பனை என்று தள்ளிவிடலாமா அல்லது இப்படி நடக்க சாத்தியம் உள்ளது என்று கூறுகிறீர்களா? தற்போது இங்கே இங்கிலாந்தில், ஸ்வைன் காய்ச்சல் அபாயம் பரவலாக உள்ளது. அதற்க்கு இந்நாட்டின் மருத்துவத் துறை என்ன கூறிஉள்ளார்கள் தெரியுமா? இந்த காய்ச்சலால் 65,000 சாவுகளை எதிர்பார்கிரார்களாம்! மேலும் இந்த காய்ச்சால் வந்துள்ளதாகத் தெரிந்தால் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம். போன் மூலமாகத் டாக்டருக்குத் தெரிவித்தால் போதும்! இதேப் போல ஒருக் காட்சி இந்த வீடியோவில் வருகிறது பாருங்கள்.
ஒரு நண்பர் 'என்ன எல்லாம் ஆங்கிலத்திலேயே உள்ளது?' என்று வினவி இருந்தார். என்ன செய்வது நண்பரே, இது போன்ற காணொளிகள் நம்ம ஆளுங்க பண்ண இன்னும் இருபது வருடங்களாவது ஆகும். இது BBC இன் தயாரிப்பு. இதுப் போல தமிழில் ஏதாவது இருந்தால் சொலுங்களேன். இதை நான் ஒரு கேவலமாக குறை கூறவில்லை. அவர்களுக்கு எல்லா வசதி வாய்ப்பும் உள்ளது என்றுத்தான் கூற வந்தேன். நீங்களே பாருங்கள், சில காலங்களுக்கு முன், இதே BBC, ஒரு அருமையான விவரணப் படத்தை அவர்கள் சேனலில் போட்டனர். ஒரு கணவன் மனைவியை தேர்ந்தெடுத்து, அந்தப் பெண்மணி கருவுறும் நாள் முதல், குழந்தைப் பிறக்கும் நாள்வரை, கூடவே இருந்து தத்ரூபமாக படம் பிடித்து இருந்தனர். இதில் வெளியே மட்டுமல்லாது உள்ளே குழந்தை எப்படி வளர்கிறது என்பதயும் காட்டி இருந்தனர். உண்மையிலே மெய்சிலிர்த்துப் போனேன். அவ்வளவு அருமையான அறிவியல் & மருத்துவப் படைப்பு. இதுப் போல நம் நாட்டில் எப்போது நடக்கும்? அதையும் பதிவாகப் போட நினைத்திருந்தேன். ஆனால் எந்த அளவிற்கு சாதியப் படும் என்று தெரியவில்லை. Nudity, அது, இது என்று புகார் வருமோ என்று நினைத்து கைவிட்டுவிட்டேன். சரி நண்பர்களே. வீடியோவைப் பாருங்கள். முடிந்தால் ஏதாவது கருத்து கூறுங்கள். வருகைக்கு நன்றி.
Good posting. Thank You.A lot of things to be learnt. Among these cinema and political crazy postings your postings are very superior. keep it up.
ReplyDeleteஅறுபத்தைந்தாயிரம் பேரா?ஒ மை காட்...இன்னும் இதற்க்கு தடுப்பூசி கூட தமிழ்நாட்டில் வரவில்லை போல் தெரிகிறது!!நான் எங்கள் ஊரில் உள்ள மருத்துவருடன் ஆலோசித்த போது இப்பொழுது தான் சிக்கன் குனியாவிற்கு தடுப்பூசி வந்துள்ளதாக தெரிவித்தார்...சவின் ப்ளு விற்கு தடுப்பூசி வர எத்தனை நாட்கள் ஆகுமோ?
ReplyDeleteஅன்புடன்,
அம்மு.
அன்புள்ள அம்மு அவர்களுக்கு,
ReplyDeleteவருகைக்கும், கருத்துக்கும் நன்றி.
நீங்கள் படித்தது பழைய கணிப்ப்பு. போன வாரத்தில் அமெரிக்காவில் மட்டும் 90.000 பேர் அழியக்கூடிய சாத்தியங்கள் இருக்கின்றதாம்! எல்லாம்வல்ல அவர்களே பயப்படுகிறார்கள். இங்கு நான் தற்போது வசிக்கும் இங்கிலாந்தில், நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டால், மருத்துவமனைக்கு செல்லக்கூடாது. ஒரு போன் பண்ணிவிட்டு அவர்கள் கூறுமிடத்தில் சென்று, அவர்கள் கொடுக்கும் மாத்திரைகளை வாங்கிக்கொண்டு வீட்டிலேயே இருக்கவேண்டும். ஏன் குடும்ப நண்பர் வெட்டில் மூன்றுப் பேருக்கு வந்து அவர்கள் சிகிச்சை மேற்கொண்டுள்ளனர். அவர்கள் மிகவும் அவதிப்பட்டது High temprature ஜுரம் & தொண்டைவலி. மற்றப்படி வேறொன்றும் இல்லை. நான் தற்போது போட்டிக்கும் பன்றிக்காய்ச்சல் பற்றிய பதிவில் உள்ள சொற்பொழிவை காணவும்.