Tuesday, 25 August 2009

ஸ்வைன் ஃப்ளு: மருத்துவச் சொற்பொழிவு (வீடியோ)



'பன்றிக் காய்ச்சல்' எனப்படும் ' ஸ்வைன் ஃப்ளு' வைப் பற்றி நிறையப்பேர் பதிவுகள் போட்டுவிட்டனர். எல்லாம், எல்லோருக்கும் மிகவும் உபயோகமாக இருந்தது. அந்த வரிசையில் இன்னுமொருப் பதிவு. ஆனால் இந்த முறை அமெரிக்காவின், கலிபோர்னியாவின் புகழ்பெற்ற பெர்கேலே பல்கலைகழகத்தில் நடந்த ஸ்வைன் ஃப்ளு பற்றிய மருத்துவக் கருத்தரங்கின் வீடியோப் பதிவு!
இந்த காய்ச்சலைப் பற்றி அனேகமாக எல்லோருக்கும் தெரிந்து இருப்பதால் நேராக வீடியோவுக்குப் போய்விடலாம். இது எல்லோரயும் போய்ச்சேர மறக்காமல் வோட்டுப் போடவும். வருகைக்கு நன்றி.



Thursday, 20 August 2009

பிரபஞ்சத்தில் நம் வளர்ச்சி : பேரா. ரிச்சர்ட் டாகின்ஸ்.(வீடியோ)

ரிச்சர்ட் டாகின்ஸ், நான் கூர்ந்து நோக்கும் ஒரு பன்முக ஆற்றல் கொண்ட உலகப் பிரபலம். தான் எடுத்துக் கொண்ட பணியில், கொள்கையில், நேர்மையாக நடைபோடும் ஒரு சிறந்த மனிதர். பொழுதுப்போக்கு துறைகளான சினிமா,நடனம்,நாடகம், பாட்டு போன்றவைகள் அல்லாத துறைகளில் உலக அளவில் பிரபலம் என்று கூறுவது மிகவும் சொற்பமே. ஆனால் அத்தகைய மனிதர்களில் டாகின்சும் ஒருவர். இந்தப் பதிவு அவரைப் பற்றி தெரியதவர்களுக்காகவும், அவரை மரியாதையை செய்யும் நோக்கில் பதிவு செய்யப்பட்டதாகும். இந்த பதிவில் வரும் ஒவ்வொரு வீடியோக்களும் குறைந்தது ஒரு மணிநேரம் ஓடக்கூடியவை. ஆனால் கண்டிப்பாகப் பார்கப்படவேண்டியவை. ஆகவே தங்கள் நேரத்தை ஒதுக்கிக்கொண்டு காண அழைக்கிறேன்.
அதற்க்கு முன்பாக அவரைப்பற்றி ஒரு சிறிய அறிமுகம்.

அவரின் முழுப் பெயர் க்ளின்டன் ரிச்சர்ட் டாகின்ஸ்.
ஆங்கிலேயரான இவர் பிறந்தது 26/03/1941, அப்போதைய பிரிட்டிஷ் காலனியான கென்யா நாட்டின் நைரோபி நகரில். தந்தையார் ஜான் டாகின்ஸ் ஆங்கில அரசின் விவசாயத்துறையில் வேலைபார்த்துவந்தார். பின்பு இரண்டாம் உலகப்போரின் போது ராணுவத்தில் சேர்க்கப்பட்டார். 1949 இல், ரிச்சர்டின் எட்டு வயதில் அவர்களின் குடும்பம் இங்கிலாந்திற்கு திரும்பியது. பின் இங்கிலாந்தில் தன் பள்ளிப்படிப்பையயும், கல்லுரி படிப்பையயும் தொடர்ந்தார்.சிறுவயது முதலே இயற்கை விஞ்ஞானத்திலும், பரிணாமக் கொள்கையிலும் ஆர்வம் கொண்டவராதலால், அது சமந்தமாகவே தன் பட்ட மேற்ப்படிப்பை ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பெற்றார். பின் அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் கல்லூரி விரிவுரையாளராகவும், பேராசிரியராகவும் தன் பணியினை மேற்கொண்டார். பழைய மைக்ரோசாப்ட் முக்கியஸ்தரான சார்லஸ் சிமொன்யி ஏற்படுத்திய பதவியான 'Simonyi Professor for the Public understanding of சயின்ஸ்' இல், 1995 அம வருடம் முதல் முதலாக நியமிக்கப்பட்டு சென்ற வருடம்தான் ஓய்வுப்பெற்றார். இது அவரின் கல்வித்துறைக்கான பணிகள். இதுத்தவிர சிறந்த நூலாசிரியரகவும்,கட்டுரையாளராகவும், சொற்பொழிவாளராகவும்,இறை மறுப்புக்கொள்கையாளராகவும் தன்னைப் பரிணமித்துள்ளார். இன்றையக் காலக் கட்டத்தில் டார்வினின் பரிணாமக்கொள்கைக்கு இவரே மிகச்சிறந்த ஆதரவாளராகத் திகழ்கிறார். அவரைப் பற்றி கூறிக்கொண்டே சென்றால் நமக்கு நேரம் பத்தாது.
தற்போது நாம் காணவிருக்கும் காணொளிகள் 'Royal Insitution Christmas Lectures' வரிசையில் நிகழ்த்தப்பட்டவைகளாகும். இவை 1825 ஆம் வருடம், 'மின்சார மனிதர்' மைகேல் பாரடே அவர்களால் தொடங்கப்பட்டு, தலைச்சிறந்த அறிவியலாளர்களால், பொதுமக்களுக்காக, இன்றுவரைத் தொடரும், விஞ்ஞானம் சார்ந்த சொர்போழிவுகளாகும். இவ்வகையில் நாம் பார்க்கப்போகும் காணொளிகள், 1991 ஆம் அண்டு நமது டாகின்ஸ் அவர்களால் வழங்கப்பட்ட தொடர் பேச்சுக்களாகும். அருமையான, எளிய நடையில், மிகுந்த சிரத்தையோடு அவர் அளித்த இந்த அறிவியல் உரைகளைக் கண்டு பாராட்டாதவர்களே இல்லை எனக்கூறலாம். அவைகளை நாமும் பார்த்து, மற்றவர்களும் பார்த்துப் பயன்பெற ஆவன செய்வோம். மேலும் நான் முன்பே கூறியதைப்போல் ஒவ்வொரு வீடியோவும் ஒருமணி நேரம் ஓடக்கூடியவை. ஆகவே ஒன்றையும் மிஸ் பண்ணாமால் நேரம் எடுத்துப் பார்க்கவும்.