The Age of Stupid, இந்த வாரத்தில் (21/22 Sep 2009) உலகம் முழுதும் 50 நாடுகளில், சுமார் 700 பதிப்புகளாக வெளியிடப்பட்ட ஒரு அறிவியல் புனைக்கதைப் போன்று தோன்றும் இந்தப் படம், மனிதனுக்கு அறிவு புகட்டும் ஒரு பாடமாகும். மனித இனத்தையே அழிக்கவல்ல காலநிலை மாற்றத்தைக் குறித்த அபாய மணியாகும். இதைப் பார்த்த இங்கிலாந்து பாராளுமன்றமே, இதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த சூளுரைத்துள்ளனர் என்றால் ... இந்தப் படத்தின் தாக்கத்தை புரிந்துக் கொள்ளலாம்.
இந்தப் படத்தின் பெயர், The Age of Stupid, நாம் வாழும் தற்காலத்தை மனதில் கொண்டு, வருகால நம் சந்ததியினர் வருத்தத்துடனும், அதே சமயம் கோபத்துடனும் கூறும் வார்த்தைகளாக உள்ளது. இந்தப் படத்திற்கு இன்னொரு சிறப்பு என்னவென்றால், இது 'Pedal powered movie' என்றழைக்கப்படுகிறது. ஏனென்றால் இந்தப் படம் முற்றிலுமாக சுத்தமான - பசுமைக் கொள்கைகளை கொண்டு தயாரிக்கப்பட்டது. இப்படத்தின் பரிவியு காட்சி சூரிய சக்தியைக் கொண்டு காட்டப்பட்டது! இதற்க்கு வந்த சிறப்பு விருந்தினர்களும், நட்சத்திரங்களும் மிதிவண்டி மூலமாகத்தான் வந்தனர்! அங்கு விற்கப்பட்ட பாப்கார்ன் கூட அதற்கான இயந்திரத்தால் வறுக்கப்படவில்லை!(வீடியோ)
இதில் காட்டப்படும் 2055 ஆண்டு உலகத்தில், ஆல்ப்ஸ் மலைகளிலே பனிப்போர்வை இல்லை, லண்டன் நகரம் வெள்ளத்தில் மூழ்கிஇருக்க, ஆஸ்திரேலியா எரிந்துக்கொண்டும், சிங்கப்பூர்,ஹாங்காங் நகரங்கள் கடலில் அமிழிந்து, லாஸ் வேகாஸ் நகரெம் பாலைவனமாகி, இந்தியாவில் தாஜ் மஹால் சிதிலமடைந்து எலும்புக்கூடுகள் எங்கும் சிதறிக்கிடக்கின்றன. இதற்கான காரணங்களை பார்கும்போதுத்தான் நாம் வாழும் தற்காலம் முட்டாள்களின் காலம் என்றழைக்கப்படுகிறது.
இந்த படத்தில் முக்கிய கதாப்பாத்திரமான உலக வரலாற்றை கூறுபவராக நடித்திருப்பவர் Pete Postlethwaite. இவர் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட புகழ்ப்பெற்ற நடிகர். Lost World: Jurassic Park இல் வேட்டைக்காரரக வருபவரை நினைவிருக்கிறதா? அவர் 2009 ஆண்டு வாக்கில் மனித இனம் தொலைத்த பல நல்ல சந்தர்ப்பங்களை மீண்டும் நினைதுப்பார்ப்பதே இந்தப் படம். இப்படத்தின் இயக்குனர் Franny Amstrong (அவரின் பேட்டி)இதுப்போன்ற படங்களை எடுத்துப் புகழ்பெற்றவர்.
சரி. ஒருவேளை இந்தியாவில் (படம்) இதைப் பார்க்க முடியாதவர்களுக்காக You Tube இல் உள்ள வீடியோக்களை இங்கே கொடுத்துள்ளேன். பார்த்து உங்களின் கருத்துகளைக் கூறவும்.நன்றி.
ப்ருஸ் வில்லிஸ் நடித்த அர்மகேடோன் படத்தில் பூமியைத் தாக்கும் ஆஸ்டிராயிடு (Asteroid) எனப்படும் சிறு கோள்கள் ஏற்படுத்தும் பீதி நிஜமானால் எப்படி இருக்கும்? [ படம் பார்க்காதவர்கள் இங்கே செல்லவும் ]
ஆமாம் நண்பர்களே, அந்த சிறுக் கோளின் பெயர் ' அபோபிஸ் ' (Apophis). இது 2004 இல் முதல் முதலாக பூமியை நோக்கி விரைவது கண்டுப்பிடிகப்பட்டது. அமெரிக்க கால்பந்து மைதானத்தைப் போல இரண்டரை மடங்கு பெரியது! இது 2029 ஆம் வருடம்,ஏப்ரல் மாதம், 13 அம தேதி ( a Friday the 13th!) பூமிக்கு மிக அருகே, அதாவது 29,450 கிமி ( 18,300 மைல்) தூரத்தில் கடந்துச் செல்லும். இந்தத் தூரம் சில செயற்கைக் கோள்களைவிட குறைந்த தூரம்! இதுவரை மனிதன் அறிந்தவரையில், பூமிக்கு அருகே வரும் மிகப் பெரிய பொருள் இதுதான்!
ஆனால் பிரச்சினை அப்போது பெரியதாக இல்லை. 2036 ஆம் ஆண்டு, இந்த மிகப் பெரிய பாறை பூமியை தாக்கும் சாத்தியக் கூறு 2,50,000 பகுதிகளில் ஒன்றாகும்! இது தற்போதுள்ள கூற்று. ஆனால் 2029 இல் பூமிக்கு அருகில் வரும்போது, பூமியின் ஈர்ப்பு விசையால் அதன் பாதையில் ஏற்ப்படும் மாற்றம், 2036 ஆம் வருடம் பெரும் சிக்கலை ஏற்படுத்துமா என்பதுதான் தற்போதைய கவலை.
சரி இந்த 'அபோபிஸ்' வந்து மோதினால் என்ன? இதற்க்கு உலகப்புகழ் விஞ்ஞானி Dr.டைசன் என்னக் கூறுகிறார் என்றுப் பாப்போம்.
இந்த அக்டோபர் எட்டாந்தேதி, புர்டோ ரிகோவில் அமெரிக்க விண்வெளித்துறை மாநாட்டில் இதுப் பற்றி நாசாவின் விஞ்ஞானிகள் நிறைய முக்கியமான முடிவுகளை எடுத்திருப்பார்கள். என்னவென்று தெரியவில்லை. அதுவரையில் நாம் கீழ் உள்ள காணொளியை காண்போம். நிறைய விஷயங்களை அறிந்துக் கொள்வோம்.
செப்டம்பர் 29, அமெரிக்க சமோவா தீவு, 8.3 ரிக்டர் அளவு நிலநடுக்கம். தொடர்ந்து சுனாமி! பின்பு 30 அன்று 10.16 மணிக்கு இந்தோனேசியா சுமத்ரா தீவுகளில் 7.6 ரிக்டர் அளவில் நிலஅதிச்சி! பிறகு அன்றே 1.52 மணிக்கு 6.6 அளவில் ஏற்ப்பட்டது. இன்று காந்தி ஜெயந்தி அன்று, பசிபிக் பெருங்கடலில் ஆஸ்திரேலியா , நியூ ஸீலாந்து அருகில் டோங்கா தீவுகளில் 6.1 அளவில் மீண்டும்.
இந்தச் செய்திகளை அலசிக்கொண்டிருந்தப்போது கீழுள்ள வீடியோ கண்ணில் பட்டது. சுனாமி என்ற அழிவுச் சக்தியை அக்கு வேறு ஆணிவேராக பிரித்துப் போட்டிருக்கிறார்கள். 2004 இல் வந்த ஆசியச் சுனாமியின் பிறப்பிடத்திற்கு சென்று கடலுக்கடியில் அது எப்படி ஏற்பட்டது என்று ஆராய்ச்சி செய்துள்ளனர். அப்படியே போகிறப்போக்கில் அமெரிக்காவின் வடமேற்கு கடற்க்கரை பகுதிகள் எதிர்நோக்கியுள்ள அதிபயங்கர அபாயத்தையும் போட்டு உடைத்துச் செல்கின்றனர். ஒன்றும் சொல்லுகிற மாதிரி இல்லை. நீங்களே வந்துப் பாருங்கள். எல்லாம் இயற்கை விட்ட வழி! ......எல்லோரயும் விஞ்ஞானமும் அதன் மூலம் மனிதன் பெறும் அறிவின் செயல்பாடுத்தான் காப்பாற்றவேண்டும்!
'EARTH' என்று பெயரிடப்பட்ட இந்த காணொளி, உலகிலேயே அதிகம் செலவிடப்பட்டு தயாரிக்கப் பட்ட காணொளி என்றுக் கருதப்பட்ட டிஸ்கவரியின் Planet Earth வரிசையின் வாரிசு ஆகும். சுமார் 8 மில்லியன் பிரிட்டிஷ் பௌண்டுகள் வரை பணம் தேவைப்பட்டுள்ளது இந்தப் படங்களை முடிக்க. 130 ஒளிப்பதிவாளர்களும், தொழில்நுட்பவல்லுனர்களும் சேர்ந்து, 62 நாடுகளில் படமாகப்பட்டதாகும்.
இந்தப் படத்தில் மூன்று மிருக இனக் குடும்பத்தைத் நாம் தொடரப்போகிறோம். முதலில் ஒரு பனிக்கரடிக் குடும்பம், தட்பவெப்ப சூழ்நிலை மாற்றம் காரணமாக, ஆர்டிக் பனிப் பிரதேசங்களில் உணவுக்காக அலையும் அவலத்தை காணப் போகிறோம். பிறகு ஒரு ஆப்பிரிக்க யானைக் குடும்பம், கோள வெதும்பல் எனப்படும் 'global warming' காரணமாக மழை தவறுவதால் ஏற்படும் வறட்சியின் காரணமாக தன் குட்டியுடன் தண்ணிருக்காக என்னக் கஷ்டப்படுகுஇறது என்பதைப் பார்த்தால், நம் கண்கள் குளமாகும். கடைசியாக கடலில் ஏற்படும் மாற்றங்களால் திமிங்கலங்கள் படும் துயரையும் காணலாம். எங்கெங்கோ, உலகின் பல்வேறு மூலைகளில் நடக்கும் இந்தத் துயரங்களின் நடுவே, எல்லா உயிர்களுக்கும் உள்ள அந்தத் தாய்ப்பாசம்,எவ்வளவு கஷ்டத்தையும் எதிர்க்கொள்ளும் சக்தியை அந்த விலங்குகளுக்கு தருகிறது என்பதை கண்கூடாகக் காணலாம். மனிதர்களுக்கு நடுவேதான் மனதைத்தொடும், மனதை நெகிழவைக்கும் சூழ்நிலைகள் இருக்கும் என்று நினைப்பவர்கள், இந்தப் படத்தைப் பார்த்தால் தங்கள் என்னத்தை மாற்றிக் கொள்ளுவார்கள் என்பது நிச்சயம். கடைசியாக இவை எல்லாவற்றிற்கும் காரணம் யார் என்று கேட்கத் தோன்றுகிறது. யாருங்க காரணம்?
[ 72 நிமிடங்களுக்குப் பிறகு வீடியோ நின்றுவிடும். அப்போது உங்கள் ரூட்டர் / மோடெம்- மின் இணைப்பைத் துண்டித்துவிட்டு, ஒரு நிமிடம் கழித்து இணைத்து மீண்டும் விட்ட இடத்திலிருந்து தொடருங்கள்.]
தண்ணீரை..... பார்க்காத நாளில்லை! பருகாத பொழுதில்லை! அது இல்லாமல் உலகில்லை! நம் வாழ்வோடு பின்னிப் பிணைந்து, அத்தியாவசியப் பொருளாக உள்ள இந்த நீரைப்பற்றி நமக்கு எவ்வளவு விஷயங்கள் தெரியும்? நண்பர் சென்ஷியின் வலைப்பூவில் உள்ள மரியாதைக்குரிய அமரர் நாகேஷின் வானொலிப் பேட்டியில் அவர் , " நமக்கு எத்தனைப் பற்கள்? என்று யாரவது கேட்டால், உடனே '32' என்று உடனே பதில் கூறுகிறோம். என்றைக்காவது அந்த 32 பற்களையும் எண்ணிப் பார்த்திருக்கிறோமா? " என்றுக் கேட்டாரே, அதுதான் நினைவுக்கு வருகிறது! அதுப்போல 'தண்ணிக்குடி, தண்ணிப்புடி, தண்ணியடி' என்று தினந்தோறும் அதை உபயோகிக்காமல் இருந்ததில்லை. ஆகவே அதைப் பற்றி 'top to bottom ' தெரிந்துகொள்ளவேண்டும் என்று நினைத்ததுண்டா? (நான் சொல்லுவது எல்லோருக்கும் அல்ல) இதோ, அதற்கான நேரம் வந்துள்ளதாக நினைத்துக் கொள்ளுங்கள்.. 'Water:The Great Mystery' என்ற வீடியோவைப் பார்க்க நேர்ந்தது. அதில் கூறப்பட்ட விவரங்கள் என்னை மிகவும் கவர்ந்தது. அதை உங்களுடனும் பகிர்ந்துக்கொள்ளவே இந்தப் பதிவு. நீங்களும் பார்த்து பார்த்து, மற்றவர்களும் பார்த்து தெரிந்துக்கொள்ள வோட்டும் போடுங்கள்.
தண்ணீரைப் பற்றிய பதிவாதலால், என்ன எழுதலாம் என்று நினைதுக்கொண்டிருந்தப்போது, முன்னுரை கூற முன்வந்தது இந்த வீடியோ. நானாக எழுதுவதைக் காட்டிலும், இது நன்றாக போய்ச்சேரும்(!) என்பதால் அதையும் சேர்த்து விட்டேன். திருப்தியா? என்று மறக்காமல் கூறுங்கள். (இதுப் போல ஒரு டீச்சர் கிடைத்தால், நம்ம பசங்க ஒருத்தரும் கிளாஸ்க்கு கட்அடிக்கமாட்டார்கள், மற்றும் நூறு சதம் பாஸ்!)
'பன்றிக் காய்ச்சல்' எனப்படும் ' ஸ்வைன் ஃப்ளு' வைப் பற்றி நிறையப்பேர் பதிவுகள் போட்டுவிட்டனர். எல்லாம், எல்லோருக்கும் மிகவும் உபயோகமாக இருந்தது. அந்த வரிசையில் இன்னுமொருப் பதிவு. ஆனால் இந்த முறை அமெரிக்காவின், கலிபோர்னியாவின் புகழ்பெற்ற பெர்கேலே பல்கலைகழகத்தில் நடந்த ஸ்வைன் ஃப்ளு பற்றிய மருத்துவக் கருத்தரங்கின் வீடியோப் பதிவு! இந்த காய்ச்சலைப் பற்றி அனேகமாக எல்லோருக்கும் தெரிந்து இருப்பதால் நேராக வீடியோவுக்குப் போய்விடலாம். இது எல்லோரயும் போய்ச்சேர மறக்காமல் வோட்டுப் போடவும். வருகைக்கு நன்றி.
ரிச்சர்ட் டாகின்ஸ், நான் கூர்ந்து நோக்கும் ஒரு பன்முக ஆற்றல் கொண்ட உலகப் பிரபலம். தான் எடுத்துக் கொண்ட பணியில், கொள்கையில், நேர்மையாக நடைபோடும் ஒரு சிறந்த மனிதர். பொழுதுப்போக்கு துறைகளான சினிமா,நடனம்,நாடகம், பாட்டு போன்றவைகள் அல்லாத துறைகளில் உலக அளவில் பிரபலம் என்று கூறுவது மிகவும் சொற்பமே. ஆனால் அத்தகைய மனிதர்களில் டாகின்சும் ஒருவர். இந்தப் பதிவு அவரைப் பற்றி தெரியதவர்களுக்காகவும், அவரை மரியாதையை செய்யும் நோக்கில் பதிவு செய்யப்பட்டதாகும். இந்த பதிவில் வரும் ஒவ்வொரு வீடியோக்களும் குறைந்தது ஒரு மணிநேரம் ஓடக்கூடியவை. ஆனால் கண்டிப்பாகப் பார்கப்படவேண்டியவை. ஆகவே தங்கள் நேரத்தை ஒதுக்கிக்கொண்டு காண அழைக்கிறேன்.
அதற்க்கு முன்பாக அவரைப்பற்றி ஒரு சிறிய அறிமுகம்.
அவரின் முழுப் பெயர் க்ளின்டன் ரிச்சர்ட் டாகின்ஸ்.
ஆங்கிலேயரான இவர் பிறந்தது 26/03/1941, அப்போதைய பிரிட்டிஷ் காலனியான கென்யா நாட்டின் நைரோபி நகரில். தந்தையார் ஜான் டாகின்ஸ் ஆங்கில அரசின் விவசாயத்துறையில் வேலைபார்த்துவந்தார். பின்பு இரண்டாம் உலகப்போரின் போது ராணுவத்தில் சேர்க்கப்பட்டார். 1949 இல், ரிச்சர்டின் எட்டு வயதில் அவர்களின் குடும்பம் இங்கிலாந்திற்கு திரும்பியது. பின் இங்கிலாந்தில் தன் பள்ளிப்படிப்பையயும், கல்லுரி படிப்பையயும் தொடர்ந்தார்.சிறுவயது முதலே இயற்கை விஞ்ஞானத்திலும், பரிணாமக் கொள்கையிலும் ஆர்வம் கொண்டவராதலால், அது சமந்தமாகவே தன் பட்ட மேற்ப்படிப்பை ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பெற்றார். பின் அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் கல்லூரி விரிவுரையாளராகவும், பேராசிரியராகவும் தன் பணியினை மேற்கொண்டார். பழைய மைக்ரோசாப்ட் முக்கியஸ்தரான சார்லஸ் சிமொன்யி ஏற்படுத்திய பதவியான 'Simonyi Professor for the Public understanding of சயின்ஸ்' இல், 1995 அம வருடம் முதல் முதலாக நியமிக்கப்பட்டு சென்ற வருடம்தான் ஓய்வுப்பெற்றார். இது அவரின் கல்வித்துறைக்கான பணிகள். இதுத்தவிர சிறந்த நூலாசிரியரகவும்,கட்டுரையாளராகவும், சொற்பொழிவாளராகவும்,இறை மறுப்புக்கொள்கையாளராகவும் தன்னைப் பரிணமித்துள்ளார். இன்றையக் காலக் கட்டத்தில் டார்வினின் பரிணாமக்கொள்கைக்கு இவரே மிகச்சிறந்த ஆதரவாளராகத் திகழ்கிறார். அவரைப் பற்றி கூறிக்கொண்டே சென்றால் நமக்கு நேரம் பத்தாது.
தற்போது நாம் காணவிருக்கும் காணொளிகள் 'Royal Insitution Christmas Lectures' வரிசையில் நிகழ்த்தப்பட்டவைகளாகும். இவை 1825 ஆம் வருடம், 'மின்சார மனிதர்' மைகேல் பாரடே அவர்களால் தொடங்கப்பட்டு, தலைச்சிறந்த அறிவியலாளர்களால், பொதுமக்களுக்காக, இன்றுவரைத் தொடரும், விஞ்ஞானம் சார்ந்த சொர்போழிவுகளாகும். இவ்வகையில் நாம் பார்க்கப்போகும் காணொளிகள், 1991 ஆம் அண்டு நமது டாகின்ஸ் அவர்களால் வழங்கப்பட்ட தொடர் பேச்சுக்களாகும். அருமையான, எளிய நடையில், மிகுந்த சிரத்தையோடு அவர் அளித்த இந்த அறிவியல் உரைகளைக் கண்டு பாராட்டாதவர்களே இல்லை எனக்கூறலாம். அவைகளை நாமும் பார்த்து, மற்றவர்களும் பார்த்துப் பயன்பெற ஆவன செய்வோம். மேலும் நான் முன்பே கூறியதைப்போல் ஒவ்வொரு வீடியோவும் ஒருமணி நேரம் ஓடக்கூடியவை. ஆகவே ஒன்றையும் மிஸ் பண்ணாமால் நேரம் எடுத்துப் பார்க்கவும்.
Terminator திரைப்படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் அர்நால்ட் இயந்திர மனிதனாக வூக்க அட்டகாசங்களைப் பார்த்திருக்கிறோம். அதுப் போல் நிஜ வாழ்கையில் சாத்தியமா? ஆம் என்கிறார்கள் விஞ்ஞானிகள்! இது வரையில் வீட்டு வேலை செய்ய, தொழிச்சாலைகளில் சிக்கலான வேலைகளைச் செய்ய ரோபோக்களை உருவாக்கி உபயோகித்து வந்தனர். ஆனால் இப்போது போர்க்களங்களில் கொல்லும் இயந்திர மனிதர்களை உருவாக்கி உள்ளனர். இவைகள் நல்லதா கேட்டதா என்று போகப் போகத் தெரியும். ஏற்கனவே இராக் போரில் இவைகள் சொந்த வீரர்களையே சுட்டுத் தள்ளிஉள்ளன என்று கேள்வி. மேலும் ஒசாமா இது போன்ற எந்திரத்தால் ஏற்கெனவே கொல்லப்பட்டுவிட்டார் என்றும் கூறப்படுகிறது.
சரி இந்த, ஹிஸ்டரி சேனல் வழங்கிய 'Real Terminators' என்ற வீடியோவை பார்ப்போமா? மேற்கூறியவை எப்படிச் சாத்தியம் என்று விளக்கமாக கூறிஉள்ளனர்.
உலகில் மனிதன் உயரினம் என்று கைக்காட்ட ஒருவரும் இல்லை!
அதன் பிறகு இவ்வுலகம் எப்படி இருக்கும்? என்னவாகும்?
என்ன ஒரு கற்பனை! அதையும் விஞ்ஞானபூர்வமாக கற்பனை செய்துள்ளார்கள்.
நம் பூமிக்கிரகம், தொடர் மாற்றங்களுக்கு உட்பட்டது. மனிதன் இவ்வுலகில் வாழ்ந்த வரையில் பல கோடி மைல்கள் வான்வெளியில் பறந்துள்ளான். பல மைல்கள் நிலத்தை குடைந்து சென்றுள்ளான். கண்டங்களை உருவாக்கி, விளை நிலங்களை செப்பனிட்டு, விவசாயம் செய்துள்ளான். உலக அதிசயங்கள் என்று கூறும் அளவிற்கு, அருமையான கட்டிடங்களை நிர்மாணித்துள்ளான். உலகின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று தெரிந்தும், அணு மின்நிலையங்களை நிறுவி விட்டான். எல்லாவற்றிற்கும் மேலாக நீர், நிலம், காற்று, ஒன்றயும் விட்டு வைக்காமல், எல்லாவற்றையும் மாசு படுத்திஉள்ளான்.
இவ்வளவையும் செய்துவிட்டு, திடீர்ரென்று, ஒரே வினாடியில், மொத்த மனித இனமே பூண்டோடு மறைந்து விட்டால்........? அவன் விட்டு செல்லும் இவ்வுலகம் என்னவாகும் என்பதை நேஷனல் ஜியோகரபிக் சேனல் உருவாகிய ஆவணப்படம் தான், நாம் காணவிருக்கும் ' AFTERMATH: POPULATION ZERO '.
இதுவும் சுமார் ஒன்றரை மணி நேரம் ஓடக்கூடிய வீடியோ இது. ஆகவே நேரத்தை ஒதுக்கிக்கொண்டு பாருங்கள். Part -1
என்னதான் நம்மை திட்டினாலும், அடித்தாலும், இவ்வுலகில் நம்மை பத்து மாதம் சுமந்து பெற்ற அருமைத்தாய், அவளுக்கு நிகர் அவளேத்தான். ஒருவேளை அவள் இல்லையென்றால், நம்மீது அன்புசெலுத்த ஒரு சித்தியோ அல்லது யாரோ ஒரு பெண்மணி வரக்கூடும். நாமும் ' அம்மாவென்றழைக்காத உயிர் இல்லையே' என்று நம் இசைஞானியின் உபயத்தால் பாடவும் கூடும்.
ஆனால், நாம் வாழும், நம்மையெல்லாம் கோடிகணக்கான ஆண்டுகள் பரிணமித்து , உருவாக்கி, வாழவைக்கும் பூமித்தாய்,... அவளுக்கு நிகர் வேறு யார்? இன்றுவரை, மனித அறிவிற்கு தெரிந்தவரை, பூமியல்லாத வேறு இடத்தில், நாம் இப்போது போல, சட்டை, பனியன் இல்லாமல் ஆதிமனிதன் போல வாழ முடியுமா? ஒருவேளை, இப்போது உலக நாடுகள், (ரகசியமாக) முயற்சிப்பதுப்போல , நிலவிலோ அல்லது வேறு கிரகத்திலோ வாழ முயன்றாலும், இதைப்போல சுதந்திரமாக, இயற்கையாக, வாழ இயலுமா? ஒருவேளை வாழ முயன்றாலும், பிராணவாயுக்கவசத்தோடு, பயந்து நடுங்கி, கட்டுப்பாடுடன்தான் வாழ நேரிடும்.
ஆனால், நம்மிடம் வேறு எதையும் எதிர்பார்க்காமல், நமக்கு பாதுகாப்பும், மகிழ்ச்சியையும், பல்வேறு நலன்களையும் தரும் நம் பூமித்தாயை என்னவென்று போற்றுவது? நம்மைமட்டுமல்லாது கோடிக்கணக்கான ஜீவராசிகளை உருவாக்கி வாழ்வித்து வளர்த்து வரும் ஒரு மேகாதாய் அவள்.
இடைஇடையே, நமக்கு வரும் சில இயற்கை உபாதைகள் போல, சில பல இயற்கை அழிவுகள் ஏற்பட்டு இருக்கலாம். ( நம் தாய் நம்மை கண்டிப்பது போல) ஆனால் அதை தடுக்க அவளாலும் முடியாது, நம்மாலும் இதுவரை முடியவில்லை. ஒருவேளை வருங்காலத்தில், அறிவியல் வளர்ச்சியால் ஏதாவது செய்ய முடிந்தால் நல்லது. இன்னொன்று இங்கு குறிபிட்டே ஆகவேண்டும். பல உபாதைகள் நம்மால் வந்ததுதான்.
இது எல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், நம் பூமித்தாயின் அழகு உள்ளதே, அதை வர்ணிக்க வார்த்தைகளோ ,எழுத்துக்களோ இல்லை. பார்த்தால்தான் ரசித்து மகிழ முடியும். அதற்காகத்தான் இந்த காணொளி!
நிறைய பேர் 'BBC இன்', 'Richard Attenbororough' வழங்கிய 'Planet Earth' பார்த்து ரசித்திருப்பீர்கள். அது போலத்தான் இதுவும் 'BBC, Walt Disney & Discovery ' சேர்ந்து வழங்கிய ' Earth ' என்ற அருமையான காணொளி. இதில் உள்ள நேர்த்தியைக்கண்டு அசந்துப்போனேன். என்ன ஒரு ஒளிப்பதிவு! ஆஹா!
ஆகவே இதை நம் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளவேண்டும் என்று , நானே ' You Tube 'இல் அப்லோட் செய்து உங்களுக்காக வழங்குகின்றேன். இதற்கு முன் போட்ட பதிவுகளும் நான் அப்லோட் செய்தது தான். ( you tube இல் அப்லோட் செய்யாமல் நாமே நம் ப்ளோகில் அப்லோட் செய்ய முடியாதா? யாராவது விளக்கம் கூற முடியுமா?)
ஆகவே நண்பர்களே, இது பத்து பகுதிகளைக்கொண்ட காணொளி. ஐந்து இப்போது , மாற்ற ஐந்து பிற்பாடு...உங்கள் பின்னுட்டங்களை பார்த்தப்பின்பு.
OK. Lights off! Start projector!
{படத்தின் நீள அகலங்கள் கம்மி ஜாஸ்தியாக இருந்தால், படத்தின் மீது 'Doubble Click' செய்து you tube மூலமாக பார்க்கவும்.}
பிறப்பு என்று ஒன்று இருந்தால், இறப்பு என்று ஒன்று உண்டு. அதன்படி நம்மையெல்லாம் வாழவைத்துக்கொண்டிருக்கும் நம் பூமித்தாயும் ஒருநாள் இல்லாமல் போவாள். ஆனால் அதைக்கண்டு மனம் பதைக்க நாம் இருக்கப்போவதில்லை. இதைப்பற்றிய ஒரு வீடியோவை காண நேர்ந்தது. அதை எல்லோரிடமும் பகிர்ந்துக்கொள்ள, மிகவும் சிரமப்பட்டு அப்லோட் செய்துள்ளேன். நீங்களும் பார்த்து, குறிப்பாக மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள். முக்கியமாக உங்கள் கருத்தை மறக்காமல் பின்னூட்டமிடுங்கள். வரவேற்பை பொறுத்து மீண்டும் சந்திப்போம்.
அன்று பாக்ஸ்சிங் டே. நேற்றைய கிறிஸ்துமஸ் தின கொண்டாட்டத்தின் மிச்சம்... ஹாங் ஓவர். பின் மண்டையில் வற்புறுத்தல். லய்ம் டீ குடித்துக்கொண்டே சன் நியூஸ் பார்க்கத்தொடங்கினேன்.
காலை எட்டு மணி இருக்கும் என்று நினைக்கிறேன், ' சென்னையில் கடல் நீர் உள்வாங்கியது', என்று பிளாஷ் நியூஸ் போட்டார்கள். மந்தமாக பார்த்துக்கொண்டிருந்தேன். ( இதற்கு மேல் இப்படி குடிக்கக்கூடாது.)மீண்டும் சிறிது நேரத்தில், ' சென்னையில் கடல் நீர் உட்புகுந்தது, மக்கள் பதற்றம்' என்று பிளாஷ் நியூஸ் வந்தது. அப்போதுதான் பொறி தட்டியது. எங்கோ,எப்போதோ படித்தது நியூரான்களில் நிழலாடியது. ஐயோ, இது சுனாமியின் சுனாமியின் அறிகுறி அல்லவா! தேநீர் கோப்பை நடுங்க , பூகோள பட்டதாரியான என் தம்பியை அழைத்தேன். வீட்டின் அனைத்து அறைகளிலிருந்தும் மிரட்சியாக எல்லோரும் எட்டிப்பார்த்தார்கள். ' ஏன்டா, சுனாமி ஜப்பானில் மட்டும் தானே வரும்? நம்ம நாட்டில் கூடவா?' என்று பதறினேன். அதற்கு அவன் ' சுனாமி, நீர் உள்ள எல்லா இடத்திலும் வரும், அதற்கு என்ன இப்போ?' என்று கேட்டான். நான் டீவீயை நோக்கி கை நீட்டினேன். அவனும் உறைந்து போனான்.
அதற்கு மேல் வந்த செய்திகளை பார்க்க,பார்க்க மனம் நடுங்கியது. பெங்களூரில் இருந்து வேளாங்கண்ணிக்கு குடும்பத்தோடு சென்ற ஒரு நண்பரின் நினைவு வந்து, அவரின் செல்லுக்கு போன் போட்டேன். ஆனால் இதுவரையில் அவரிடம் இருந்து தகவல் இல்லை. எனக்கும் அவரை பற்றி விசாரிக்க துணிவு இல்லை.
தற்போது சுனாமி பற்றிய ஒரு ஆவணப்படம் ஒன்று காண நேரிட்டது. மிகவும் அருமையாக தயாரிக்கப்பட்டுள்ள அதை கண்டவுடன், அந்த கொடிய டிசம்பர் 26, ஞாபகம் வந்தது. நிறைய பேர் அதை பார்த்திருப்பீர்கள் என்றாலும், பார்க்காதவர்களுக்காக அதை பதிவு செய்கிறேன்.